செய்திகள் :

BB Tamil 9: "அப்படி தான் தெரியுது; பச்சையா தெரியுது FJ"- வாக்குவாதம் செய்யும் அரோரா

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.

நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அடுத்த வாரத்திற்கான 'வீட்டு தலை' டாஸ்க் நடந்தது.

'முடிஞ்சா மிதி' என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் ஆதிரையும், FJ-வும் சேர்ந்து விளையாடினர். அப்போது விக்ரமுக்கும், FJ-வுக்கும் சண்டை நடந்தது. "கால்ல புடிச்சு ஏன் இழுக்குறீங்க. எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு ஆக்ரோஷமா நடந்துக்குறீங்க" என FJ விக்ரமை சாடினார்.

விக்ரம் அதனைக் கண்டுகொள்ளாமல் கேம்மில் கவனம் செலுத்தினார்.

தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில் அரோராவுக்கும் FJ-வுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. " நீ டாஸ்க் ஒழுங்கா விளையாடலன்னு நான் சொல்லல. டீம்மை விட்டிட்டு நீ போனதை தான் நான் சொன்னேன். கோவத்துல நீ எதுக்கு டீம்மை விட்டு போன...

BB Tamil 9
BB Tamil 9

என்னோட ஒப்பினியனை நான் சொல்றேன். உன்னைப் பத்தி ஒருத்தவுங்க ஒரு பாயிண்ட் எடுத்து வச்சா அவங்களை எப்படி கீழே இறக்கி விடணும்'னு தான் நினைக்கிற..." என்று அரோரா, FJ-விடம் சொல்ல "முதல்ல கத்தாத. வீட்டு தலையாகி எதாச்சும் பண்ணிருவியோன்னு பயமா இருக்கு" என FJ, அரோராவிடம் நக்கலாக பேசுகிறார்.

BB 9 : "இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?"- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க

BB Tamil 9: "இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே"- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா - 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவர... மேலும் பார்க்க

`என்னைப் பத்தி அவங்க சொன்னதெல்லாம் பொய்னு சட்டப்படி நிரூபிச்சிட்டேன்!’ - பிக்பாஸ் தினேஷ்

சில தினங்களுக்கு முன் மோசடிப் புகார் தொடர்பாக பிக்பாஸ் தினேஷ் கைது என செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.வள்ளியூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் தினேஷ் பணம் பெற்றுக் க... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 74: `வலை வீசி பிடிச்சிட்டியே.. திருட்டுப்பயலே' தொடரும் கம்மு - பாரு அலப்பறை

டான்ஸ் டாஸ்க்கில் ‘யம்மாடி ஆத்தாடி’ அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணியில் எவருடைய குடும்பத்தினர் 24 மணி நேரத்திற்கு வீட்டில் தங்க வாய்ப்பு கிடைக்கும்? அடம் பிடித்து பாரு வாங்கிவிடுவாரா?‘என் குழந்தை... மேலும் பார்க்க