திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை ச...
BB Tamil 9: "இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே"- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.
நாமினேஷனில் சான்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்ற கம்ருதீன் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் பேசிய விஜய் சேதுபதி, "இந்த வாரம் வீடு முழுக்க ஓவர் ரியாக்ஷனா இருந்துச்சு.
அந்த நபர் கிட்ட ஹவுஸ் மேட்ஸ் கேட்டதுக்கு அவுங்க கிட்ட எந்த விளக்கமும் இல்ல.
இதுக்கு இவ்வளவு தேவையா அப்படிங்கிற மாதிரி நமக்கே தோணுச்சு.
அதனால இவங்க கிட்ட கேக்குறதுக்கு நம்ம கிட்ட எந்த கேள்வியும் இல்ல. அவங்க விளக்கம் கொடுத்தா மட்டும் போதும். இதுக்கு இவ்வளவாமா?

எதுக்குமா இவ்வளவு... விளக்கத்தை கேட்ருவோமா? என்று பேசியிருக்கிறார். விஜய் சேதுபதி சொல்லும் நபர் சான்ட்ராவாகத் தான் இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
















