வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
BB Tamil 9: "எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு இப்போ.!" - விக்ரமை சாடும் FJ
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.
நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் அடுத்த வாரத்திற்கான 'வீட்டு தலை' டாஸ்க் நடக்கிறது.
'முடிஞ்சா மிதி' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் கலந்துகொள்கின்றனர்.
இதில் ஆதிரையும், FJ-வும் சேர்ந்து விளையாடுகின்றனர். அப்போது விக்ரமுக்கும், FJ-வுக்கும் சண்டை நடக்கிறது.
"கால்ல புடிச்சு ஏன் இழுக்குறீங்க. எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு ஆக்ரோஷமா நடந்துக்குறீங்க" என FJ விக்ரமை சாடுகிறார்.
விக்ரம் அதனைக் கண்டுகொள்ளாமல் கேம்மில் கவனம் செலுத்துகிறார்.
















