திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை ச...
நண்பர் அறை என கருதி கதவை தட்டிய செவிலியர்; உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் - அதிர்ச்சி
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து கிரண் ரத்தோட் உட்பட 3 நண்பர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்நேரம் பெண் ஒருவர் வந்து அந்த அறை கதவை தட்டினார். உள்ளே இருந்தவர்கள் கதவை திறந்தபோது, அவர்களிடம் தனது நண்பர் ஒருவரின் பெயரை சொல்லி அவர் இருக்கிறாரா என்று கேட்டுள்ளார். அவர்கள் உங்களது நண்பர் உள்ளேதான் இருக்கிறார் என்று சொல்லி அப்பெண்ணை உள்ளே இழுந்து மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரவினா கூறுகையில், ''பாதிக்கப்பட்ட பெண் ஒரு செவிலியர். அவரின் கணவருக்கு வேலை இல்லை. இதனால் பண நெருக்கடியில் இருந்தார். இதனால் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் பணம் கேட்டு இருந்தார். அந்த நண்பர் பணம் தருவதாக கூறி அப்பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

இரவு 11 மணிக்கு அப்பெண் போன் பேசுவதற்காக ஹோட்டல் அறையில் இருந்து வெளியில் வந்தார். அவர் பேசிவிட்டு மீண்டும் அதே அறைக்கு செல்ல நினைத்தபோது தவறுதலாக வேறு ஒரு அறை கதவை தட்டிவிட்டார்.
அவரது நண்பர் 105வது அறையில் இருந்தார். ஆனால் அப்பெண் தவறுதலாக 2வது மாடிக்கு சென்று 205வது அறை கதவை தட்டினார். உள்ளே கதவை திறந்தவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களிடம் தனது நண்பர் பெயரை சொல்லி கேட்டுள்ளார். அதில் ஒருவர் உங்களது நண்பர் பாத்ரூம்பில் இருப்பதாக கூறி அறைக்குள் இழுத்துள்ளார். அறைக்குள் இழுத்த பிறகு அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து மூன்றுபேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.
அப்பெண் அதிகாலை 4 மணிக்கு மூன்று பேரிடமிருந்து தப்பித்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து போலீஸில் புகார் செய்தார்'' என்றார். அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

















