"அப்போதுதான் உண்மை முகம் தெரிந்தது; அவர்களின் பெயர்களைச் சொன்னால்..." - ராதிகா ஆ...
சூதாட்ட செயலி விளம்பரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகர் சோனுசூட்டின் ரூ.7.93 கோடி சொத்து பறிமுதல்
கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோத சூதாட்ட செயலி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த மொபைல் செயலி மூலம் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் வரக்கூடிய வருமானத்திற்கு முறையாக கணக்கு காட்டுவது கிடையாது. இந்த சட்டவிரோத மொபைல் செயலிகளுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 1xBet என்ற சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மொபைல் செயலியை விளம்பரப்படுத்துவதில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் ஈடுபட்டனர்.
இதன் மூலம் 1xBet மொபைல் செயலி இந்தியாவில் சட்டவிரோதமாக ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் செய்தது. ஆனால் இந்த மொபைல் செயலி வெளிநாட்டை சேர்ந்தது ஆகும்.

இந்த சட்டவிரோத மொபைல் செயலிக்காக சோசியல் மீடியா மற்றும் எலக்ட்ரானிக் மீடியாவில் விளம்பரம் செய்தது தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சிகர் தவான் ஆகியோரின் ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது மேலும் சில பிரபலங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகர் சோனு சூட், நடிகை ஊர்மிளா ரவுடேலா, மிமி சக்ரவர்த்தி, நேகா சர்மா ஆகியோரின் ரூ.7.93 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மூலம் இவ்விவகாரத்தில் இதுவரை 19.07 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சொத்து பறிமுதல் செய்யப்பட்டவர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிரபலங்கள் தெரிந்தே வெளிநாட்டு மொபைல் செயலிக்காக விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

















