செய்திகள் :

சிதுமூஸ்வாலா கொலையாளிகளுக்கு அடைக்கலம் - செல்பி எடுப்பதுபோல் வந்து கபடி வீரர் சுட்டுக்கொலை

post image

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுத கலாசாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் இன்னும் குறையவில்லை. எல்லையில் பாகிஸ்தான் இருப்பதால் அடிக்கடி அங்கிருந்து துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. ட்ரோன் மூலம்கூட இவற்றை கடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் சோஹனா கோப்பை கபடிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் கபடி வீரர் கன்வர் திக்விஜய் சிங் என்பவரும் கலந்து கொண்டார். கன்வர் திக்விஜய் சிங் இந்த கபடி போட்டியை ஒருங்கிணைத்து நடத்துபவர்களில் ஒருவராக இருந்தார்.

கபடி போட்டியை காண இரண்டு பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் கூட்டத்திற்குள் படிப்படியாக முன்னேறி உள்ளே சென்றனர். அங்கு கன்வர் சகவீரர்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அடிக்கடி ரசிகர்கள் வந்து செல்பி எடுத்து சென்றனர்.

இதை பயன்படுத்திக்கொண்ட இரண்டு பேர் கன்வரிடம் செல்பி எடுக்கவேண்டும் என்று கூறி மிகவும் நெருக்கமாக சென்றனர். அவர்கள் செல்பி எடுத்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக துப்பாக்கியை சுட்டார்.

இதில் கன்வர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இத்துப்பாக்கிச்சூட்டை பார்த்து அங்கு கூடியிருந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரும் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டு தாங்கள் தப்பிச்செல்ல கூட்டத்தை கலைந்து போகும்படி கூறினர். பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து இரண்டு பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். கீழே விழுந்து கிடந்த கன்விரை உடனே போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கன்வர் மீது 6 முதல் 7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்தது. அவர் ஏற்கனவே இறந்திருந்தார். சம்பவத்தின்போது முதலில் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தனர். உண்மை தெரிய வந்தபோதுதான் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து ஓடினர். இப்படுகொலைக்கு செளதரி-சகன்பிரீத் கேங்க் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக பதிவிட்டுள்ளனர்.

அவர்கள் தங்களது பதிவில், இன்றைக்கு சிது மூஸ்வாலா படுகொலைக்கு பழிக்குபழி வாங்கும் விதமாக கன்வர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிது மூஸ்வாலாவை கொலை செய்தவர்களுக்கு கன்வர் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், கன்வரும் சிது மூஸ்வாலா கொலையில் ஈடுபட்டதாகவும், லாரன்ஸ் கேங்குடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.!

கரூர்: '1000 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் திருட்டு' - குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ,அதேபோல், இந்தக் க... மேலும் பார்க்க

`உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்

கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்... மேலும் பார்க்க

அர்ஜுனா ரணதுங்க: பெட்ரோலிய ஊழல் வழக்கில் கைதாவாரா? - இலங்கை நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்!

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோர் மீது 2017 ஆம் ஆண்டு எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஊழல்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை மத்திய சிறை: 11 கைதிகள் இடமாற்றம் ஏன்? - சிறை கண்காணிப்பாளர் சொல்லும் காரணம்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து 2 போக்சோ கைதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. அதேபோல், தண்டனைக் கைதியான பால சுப்பிரமணியன் என்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கணவர் கண் முன்னே மனைவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரசர்குளத்தில் உள்ள தனியார் ஹாலோபிளாக் கம்பெனியில் 15 நாட்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைக்குச் சேர்ந்துள்ளனர். நெல்லையில் வச... மேலும் பார்க்க

திருச்சி: `புதிய மின்கம்பம் நட ரூ. 2000 லஞ்சம்!' - உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் காலனி, ராஜன் நகர் பகுதியில், காசி ரைஸ் புலவர் மற்றும் ஆயில் மில் செயல்பட்டு வருகிறது. இதற்கு புதிய மின் இணைப்பு பெற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேல... மேலும் பார்க்க