'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
திமுக எம்.எல்.ஏ கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே விவசாயி பலியான சோகம்!
திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியுள்ளார். அப்போது தென்னமநாடு, நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50) காருக்கு முன்னே சென்றுள்ளார். கார் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தென்னமநாட்டில் கோவிந்தராஜ் சென்ற டூவீலர் மீது கார் வேகமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து கோவிந்தராஜ்க்கு முதலுதவி செய்வதற்கு ஓடினர். துரை.சந்திரசேகரனும் காரை விட்டு இறங்கி சென்று பார்த்தார். ஆனால் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.
அங்கிருந்த திமுகவினர் சிலர் உயிர் இருப்பதாக சொல்லி சந்திரசேகரனை மற்றொரு காரில் அனுப்பி வைத்து விட்டனர். இதையறிந்த கோவிந்தராஜனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய உறவினர்கள் சிலர், வயலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது டூவீலரில் கோவிந்தராஜ் சென்றார்.

அப்போது அதிவேகமாக வந்த திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கார், டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் பலியாகி விட்டார். இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் கார் மெதுவாக வந்திருக்கலாம். வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்கிறார்கள். இறந்த கோவிந்தராஜின் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இரண்டு மகள்கள் உள்ளனர் என்றனர்.



















