'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
'நீங்க அதிர்ஷ்டம்னு சொன்னா தலைகீழாதான் செய்வேன்!' - ஸ்ரேயாஸ் ஐயர் சுவாரஸ்யம்!
அபுதாபியில் ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து வருகிறது. ஏல அரங்கில் பஞ்சாபின் மேஜையில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அமர்ந்திருக்கிறார். கடந்த சீசனில் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த அவர், ஏல அரங்கில் ஒரு இடைவேளையில் ஏல அனுபவம் குறித்துப் பேசியிருந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது, 'இங்கு ஏலத்துக்கு வருவதற்கு முன்பே நாங்கள் இதுசார்ந்து பல சந்திப்புகளை நடத்தினோம். நாங்கள் திட்டமிட்டு தயாரித்த விதம் காரணமாக அனைவருமே இலகுவான மனநிலையில் இருக்கிறோம். எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு சரியாகத் தெரியும்.” என்றார்.
ஏலத்திற்கு முன் அல்லது ஏலத்தின் போது நீங்கள் ஏதாவது நம்பிக்கைகளை கடைபிடிப்பீர்களா? எனும் கேள்விக்கு, 'எனக்கு எந்த மூடநம்பிக்கையும் இல்லை.

ஏதாவது ஒரு விஷயத்தை ஒரு விதமாகச் செய்தால் அதிர்ஷ்டம் வரும் என்று தோன்றினால், அதற்கு எதிராகச் செய்வதையே நான் விரும்புவேன். அந்த ஜிங்க்ஸை உடைப்பதில் எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு' என்று சுவாரஸ்யமாக குறிப்பிட்டார்.
















