'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
Auqib Dar : 'ரூ.30 லட்சம் டு 8 கோடி!' - வியக்க வைத்த காஷ்மீர் வீரர்! - யார் இவர்?
அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் தர் ஏல அரங்கையே வியக்க வைத்திருக்கிறார். அடிப்படை விலையாக 30 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த இவரை டெல்லி அணி 8.40 கோடிக்கு வாங்கியிருக்கிறது. யார் இவர்?

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆகிப் தர்ருக்கு 29 வயது. வேகப்பந்து வீச்சாளரான இவர் டேல் ஸ்டெய்னை போல வீசுவதால் லோக்கல் டேல் ஸ்டெய்ன் என்றும் அந்த வட்டாரத்தில் பெயர் பெற்றிருக்கிறார்.
நியூ பாலில் ஸ்விங்க் செய்வது இவரின் சிறப்பம்சமாக இருந்தாலும், சமீபமாக டெத் ஓவர்களிலும் கலக்கி வருகிறார். சையத் முஷ்தாக் அலி தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமியும் 8 க்கு கீழ்தான் இருக்கிறது.

முன்னதாக கொல்கத்தா மற்றும் சன்ரைசரஸ் அணிகளில் நெட் பௌலராகவும் இருந்திருக்கிறார். ஏல அரங்கில் இவரை வாங்க சன்ரைசர்ஸூக்கு ம் டெல்லிக்கும் இடையே கடும் போட்டியே நிலவியது. இறுதியில் டெல்லி அணி 8.40 கோடிக்கு இவரை வாங்கியது.
















