'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
CSK : ஜடேஜாவுக்கு ரீப்ளேஸ்மென்டாக சிஎஸ்கே ரூ.14 கோடிக்கு அள்ளி வந்த பிரஷாந்த் வீர்! - யார் இவர்?
அபுதாபியில் நடந்து வரும் ஐ.பி.எல் மினி ஏலத்தில் Uncapped வீரரான பிரஷாந்த் வீரை சென்னை அணி 14.20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. அவரின் அடிப்படை விலை 30 லட்சம்தான். சென்னை இவ்வளவு பெரிய தொகையை அவர் மீது முதலீடு செய்ய என்ன காரணம்?

ஜடேஜாவின் ஸ்பாட்.!
சென்னை அணி அதன் முக்கிய நட்சத்திர வீரரான ஜடேஜாவை ராஜஸ்தானுக்கு ட்ரேடிங் மூலம் அனுப்பிவிட்டு சாம்சனை வாங்கியிருந்தது. ஜடேஜாவின் அந்த இடதுகை ஸ்பின்னர் + பேட்டர் எனும் ஆல்ரவுண்டர் ஸ்லாட்டுக்கு சென்னை அணிக்கு ஒரு வீரர் தேவை. அந்த ஸ்லாட்டுக்குதான் பிரஷாந்த் வீரை சென்னை அணி வாங்கியிருக்கிறது.
20 வயதான பிரஷாந்த் வீர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். UP T20 லீகில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தார். கடந்த சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 320 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். அவருக்குதான் Emerging Player of The Year விருதும் வழங்கப்பட்டது.

அதேமாதிரி, சையத் முஷ்தாக் அலி தொடரிலும் 7 போட்டிகளில் 112 ரன்களை 170 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். ஜடேஜாவுக்கு சரியான ரீப்ளேஸாக இருப்பார் என்பதால் அவரை சென்னை அணி கவனத்தில் கொண்டது. ட்ரையல்ஸூக்கும் அழைத்தது. அதைத்தொடர்ந்தே ஏலத்தில் ரூ.14.20 கோடிக்கு அவரை வாங்கியிருக்கிறது.
















