'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
Pawan Kalyan: 'OG' பட சக்சஸுக்குப் பரிசு; 3 கோடி ரூபாய் மதிப்பிலான கார் பரிசளித்த பவன் கல்யாண்!
அரசியலில் கவனம் செலுத்தி வந்தாலும் இந்தாண்டு பவன் கல்யாணுக்கு இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. கடந்த ஜூலை மாதம் அவர் நடிப்பில் 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படம் வெளியாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து சில மாதங்களில் 'ஓஜி' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகின. 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படம் திரையரங்குகளில் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால், 'ஓஜி' திரைப்படம் பெரிய வசூலை அள்ளியிருக்கிறது. இப்படியான பிரமாண்ட வெற்றிக்காக 'ஓஜி' படத்தின் இயக்குநர் சுஜித்துக்கு கார் ஒன்றைப் பரிசளித்திருக்கிறார் பவன் கல்யாண்.
ரூ. 3 கோடி மதிப்பிலான லாண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை பவன் கல்யாண் பரிசளித்திருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் சுஜித், "சிறந்த பரிசு இது! வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உணர்ச்சி பொங்கி நிற்கிறேன்.
என் அன்புக்குரிய உண்மையான ஓஜி, பவன் கல்யாண் காருவிடம் இருந்து கிடைத்த இந்தப் பரிசு அன்பும் ஊக்கமும் தருகின்றன.
குழந்தைப் பருவத்தில் அவரது ரசிகனாக இருந்திருக்கிறேன். இன்று அவரிடம் இந்தச் சிறப்புப் பரிசு கிடைத்திருக்கிறது.
அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன்!" எனக் கூறியிருக்கிறார்.


















