`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' - உதயநிதி ஸ்பீச் ஹை...
"கேரம் வீராங்கனை கீர்த்தனாவின் சாதனை; இந்த மூன்று கோரிக்கைகளை அரசு நிறைவேற்றணும்" - பா.ரஞ்சித்
7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது.
இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று, உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
இதையடுத்து சென்னை திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரம் வீராங்கனை கீர்த்தனா, "நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனக்கு சரியான வீடு கூட இல்லை, அரசு அதையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.'' என்று அரசிற்குக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் கேரம் வீராங்கனை கீர்த்தனாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித், "நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் தமிழ்நாடு முதல்வரிடம் வைக்கிறது.
உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.
நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் @CMOTamilnadu அரசிடம் முன்வைக்கிறது.
— pa.ranjith (@beemji) December 14, 2025
உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத… pic.twitter.com/LRgBkHAPbe
இதை ஊக்கப்படுத்த வேண்டியது இச்சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இம்மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படி நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது" என்று வேண்டுகோள் வைத்து தனது எக்ஸ் தளம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.




.jpg)











