செய்திகள் :

நெல்லை: போதையில் தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் தாய் செய்த செயல்... விபரீதத்தில் முடிந்த சோகம்!

post image

நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. பகலில் தந்தை கண்ணனுக்கு உதவியாக அப்பகுதியில் அவர் நடத்திவரும் இறைச்சிக் கடையில் வேலை செய்துள்ளார்.

வேலை நேரத்திலும் அவர் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வாராம். சில நாள்களில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவார் என அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று (9-ம் தேதி) அளவுக்கு அதிகமாக மது குடித்த அவர் நள்ளிரவில் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரவில் உணவு இருக்கிறதா எனக் கேட்டு தாய் லதாவுடன் சண்டையிட்டுள்ளார்.

மாயாண்டி

தாய், மகன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. மது போதை தலைகேறிய நிலையில் இருந்த மாயாண்டி தாய் என்றும் பாராமல் லதாவை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதனால் நிலைகுலைந்த லதா வீட்டில் காய்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து தற்காப்புக்காக மாயாண்டியின் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார்.

கத்திக் குத்தில் பலத்தக் காயமடைந்த மாயாண்டி, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி இன்ஸ்பெக்டர் ராபர்ட் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று லதாவைக் கைது செய்தனர். அத்துடன், மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்து தாக்கிய மகனை பெற்ற தாயே கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மகனின் கண் முன்னால் தாய்க்கு பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 41 வயதான பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 08.03.2026-ம் தேதி மதுரவாயல் பகுதியிலுள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் தன்னுடைய மகனு... மேலும் பார்க்க

சென்னை: மகளுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை தற்கொலை; அடுத்த நொடியில் மகள் எடுத்த விபரீத முடிவு

சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்... மேலும் பார்க்க

நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, அருகிலுள்ள கோவில்பத்துவில் உள்ள டியூசன் சென்டரில் மாலை நேரத்தில் டியூசன் படித்து இரவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், வழக்கம... மேலும் பார்க்க

ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்... மேலும் பார்க்க

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்க... மேலும் பார்க்க

தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது

தென்காசியைச் சேர்ந்தவர் சொர்ணம். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்குடியில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளர... மேலும் பார்க்க