செய்திகள் :

T20 WorldCup: "ஜிம்​பாப்வே போட்​டிக்கு முன்​பாக கம்​பீர் என்னிடம் அதைச் சொன்னபோது..."- சஞ்சு சாம்சன்

post image

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் ரன்களைக் குவித்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், "ஒன்​றரை ஆண்​டுகளுக்கு முன்பே வெஸ்ட் இண்டிஸில் நடந்த உலகக்​கோப்பையில் விளை​யாடிக்​கொண்டிருந்தபோதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்​டும் என்று நான் சிந்​தித்​து, கற்​பனை செய்​து, பயிற்​சி​யும் எடுத்து வந்​தேன்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ஆனால், நியூஸிலாந்து தொடருக்​குப் பிறகு என் கனவு​கள் அனைத்​தும் சிதைந்து​ விட்​ட​தாகவே நினைத்தேன்.

நியூஸிலாந்து தொடருக்​குப் பிறகு நான் உடைந்து போயிருந்​தேன். நான்கு முதல் ஐந்து நாட்​களுக்கு என்​னால் என் படுக்​கையை விட்டு நகரக்​கூட முடியவில்​லை. என்​னால் பேட்​டிங் செய்ய முடிய​வில்​லை.

நான் முடங்கிபோய் இருந்தேன். நான் மகிழ்ச்​சி​யாக இல்​லை. எனக்​குக் கிடைத்த வாய்ப்​பு​களை நான் சரி​யாகப் பயன்​படுத்​த​வில்லை என்ற உண்மையை ஏற்​றுக்​கொண்​டேன்.

அந்த உண்​மையை நான் ஏற்​றுக்​கொண்​ட​வுடன், என்​னால் ஓரளவு விரை​வாக மீண்டு வர முடிந்​தது. ஜிம்​பாப்வே போட்​டிக்கு முன்​பாக நான் கவுதம் கம்​பீரை உடற்​ப​யிற்சிக் கூடத்​தில் சந்​தித்​தேன்.

அப்​போது அவர் என்​னிடம், ‘சஞ்​சு, தயா​ராக இரு, அடுத்த போட்​டி​யில் நீ விளை​யாடப் போகிறாய்’ என்று கூறி​னார். அப்​போது என் மனதுக்​குள், ‘இப்​போது செயலில் காட்​டு​வோம். இதற்​காகத்​தான் நான் காத்​திருந்​தேன்’ என்று சொல்​லிக்​கொண்​டேன்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

அணி​யில் உள்ள எனது சக வீரர்​களு​டன் போட்​டி​யிடு​வதை நான் விரும்புவதில்லை. நாங்​கள் அனை​வரும் ஒரு பொது​வான இலக்​கிற்​காக இணைந்து போராடும்​போது​தான், என்​னால் சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்த முடிகிறது.

நாங்​கள் அனை​வரும் உலகக்​கோப்பை என்ற ஒரே இலக்​கிற்​காக இணைந்து போ​ராடினோம். இறு​தி​யில் எல்​லாம் சுப​மாக அமைந்​த​தில்​ எனக்​கு மகிழ்ச்​சி" என்று சஞ்​சு சாம்சன் பேசியிருக்கிறார்.

T20 WC: `இந்திய அணி ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டது' பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்

டி20 உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்றிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்து பேசியிருக்கிறார். விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோயப் அக்தர், "இது தெரு ஒன்றி... மேலும் பார்க்க

T20 World Cup: `மீண்டும் டீ கப் புகைப்படம்' - வருண் சக்ரவர்த்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்!

2026 T20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு, வருண் சக்ரவர்த்தி மீண்டும் நகைச்சுவையாக ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.T20 உலகக் கோப்பையை இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 96 ரன்கள் வித... மேலும் பார்க்க

T20 WC: "என்னைபோல இந்த தருணத்திற்காக நீயும் ஆசைப்பட்டாய்.!"- மனைவிக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிரடி காட்டிய ... மேலும் பார்க்க

T20 WC: இந்திய தேசத்தின் சொத்து; எதிரணியினருக்கு சிம்ம சொப்பனம் - பும்ரா ஒரு தலைமுறைக்கான பௌலரே!

2024 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் விராட் கோலி பும்ராவை ‘இந்திய நாட்டின் சொத்து’ என்று பாராட்டி இருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து அதே வார்த்தைகளில் மீண்டும் பும்ராவை ஏகத்துக்கும் புகழ்ந்... மேலும் பார்க்க

IND Vs NZ: `கார் விபத்தில் என் சகோதரியை இழந்துவிட்டேன்; இந்த வெற்றியை...' - இஷான் கிஷன் எமோஷனல்

அகமதாபத்தில் நேற்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையைச் சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் ம... மேலும் பார்க்க