சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!
T20 WC: "என்னைபோல இந்த தருணத்திற்காக நீயும் ஆசைப்பட்டாய்.!"- மனைவிக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சன்
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருக்கிறது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், தொடர் நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தன் மனைவிக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " உன்னை சந்தித்த முதல் நாளில் இருந்து, இந்த நாள் வரை.. எனக்கு உறுதுணையாக இருந்ததற்கும், என்னை அப்படியே ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. என்னுடைய நல்ல மற்றும் கெட்ட தருணங்களை பார்த்து, என்னுடன் துணை நின்றிருக்கிறாய்.
என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதை உன்னுடைய வாழ்க்கையில் இணைத்து கொண்டதற்கு நன்றி. என்னைபோல இந்த தருணத்திற்காக நீயும் ஆசைப்பட்டாய். அனைத்துக்கும் நன்றி" என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

















