செய்திகள் :

IND Vs NZ: `கார் விபத்தில் என் சகோதரியை இழந்துவிட்டேன்; இந்த வெற்றியை...' - இஷான் கிஷன் எமோஷனல்

post image

அகமதாபத்தில் நேற்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையைச் சூடி இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா போன்றோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்களை எடுத்தது.

இந்திய அணி
இந்திய அணி

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஷான் கிஷன், "டி20 உலகக்கோப்பைக்கு முன் கார் விபத்தில் நான் என் சகோதரியை (cousin sister) இழந்துவிட்டேன். அவளை நினைத்துதான் நான் இறுதிப்போட்டியில் விளையாடினேன்.

அவளுக்கு இந்த வெற்றியைச் சமர்பிக்கிறேன். மேலும் பெண்கள் தினத்தில் இந்தக் கோப்பையை வென்றது இன்னும் சிறப்பான ஒரு விஷயமாக இருக்கிறது" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

T20 WC: இந்திய தேசத்தின் சொத்து; எதிரணியினருக்கு சிம்ம சொப்பனம் - பும்ரா ஒரு தலைமுறைக்கான பௌலரே!

2024 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் விராட் கோலி பும்ராவை ‘இந்திய நாட்டின் சொத்து’ என்று பாராட்டி இருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து அதே வார்த்தைகளில் மீண்டும் பும்ராவை ஏகத்துக்கும் புகழ்ந்... மேலும் பார்க்க

IND vs NZ: "எனது அடுத்த இலக்கு தங்கப்பதகத்தை வெல்வதுதான்.!"- கேப்டன் சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர... மேலும் பார்க்க

"ஒட்டுமொத்த நாடும் என்னை விமர்சித்துக் கொண்டிருந்தது, அந்த சமயத்தில் எனக்கு.!" - கம்பீர் எமோஷனல்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்... மேலும் பார்க்க