செய்திகள் :

'நமக்காக பேச யாருமில்லை' - விரக்தியடைந்த விசிக நிர்வாகிகள்; இழுபறியில் பேச்சுவார்த்தை?

post image

வி.சி.க - தி.மு.க இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை என்றும் வி.சி.க-வுக்காக குரல் கொடுக்க தி.மு.க கூட்டணியில் யாருமே இல்லை என விரக்தியடைந்து வருகிறார்கள் வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர்.

அண்ணா அறிவாலயம்

வி.சி.க மாணவரணி துணைச் செயலாளர் நெப்போலியனின் சமூக வலைதள பதிவில், "தி.மு.க-வில் இருக்கிற நாயுடு சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் தே.மு.தி.க-வை கூட்டணிக்கு கொண்டுவந்து அதிக தொகுதிகளை வாங்கிதந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பகிரங்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், தி.மு.க-வில் இருக்கும் தலித் அமைச்சர்கள், நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்பேர்பட்டாவது விடுதலை சிறுத்தைகளை காலி செய்து விட வேண்டும் அவர்களை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களைத்தான் நாம் பார்க்க முடிகிறது. திமுகவில் லாபி செய்வதற்கு நமக்கு யாரும் இல்லை நம்ம தலைவர்தான் பேசி பேசி சீட்டை அதிகம் பெற்று ஆக வேண்டும்" என்றிருக்கிறார்.

இதையடுத்து, தி.மு.க - வி.சி.க இடையே என்ன தான் நடக்கிறது என விசாரித்தோம், நம்மிடம் பேசிய விபரமறிந்தவர்கள், "சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் முதற்கட்ட தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உட்பட ஒட்டுமொத்த வி.சி.க முகாமும் உறுதியாக இருக்கிறது.

திருமாவளவன், ஸ்டாலின்

ஆனால், ஏகப்பட்ட கட்சிகள் கூட்டணியில் இருப்பதாகக் கூறி 5 அல்லது 6 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என தி.மு.க மெசெஜ் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த தகவலால் வி.சி.க முன்னணி நிர்வாகிகள் பலரும் விரக்தியடைந்து வருகிறார்கள். இதன் வெளிப்பாடாகவே முன்னணி நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் வெடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தி.மு.க என்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் 8 - 10 தொகுதிகளுக்கு குறைவான தொகுதிகளை ஏற்க வி.சி.க முன்னணி நிர்வாகிகள் தயாராக இல்லை" என்கிறார்கள்.

அப்பா நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றால் என்ன, பீகார் அரசியலில் என்ட்ரி கொடுத்த 'மகன்' நிஷாந்த்

முதலமைச்சராக பதவியேற்ற கிட்டத்தட்ட 4 மாதங்களில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.அடுத்து ராஜ்ய சபா உறுப்பினராக தேசிய அரசியலில் என்ட்ரி கொடுப்பதாகவும் அறிவி... மேலும் பார்க்க

விவசாய கடன் தள்ளுபடி; இரு விமான நிலையங்களிடையே ரூ22000 கோடியில் மெட்ரோ ரயில்- மகா., பட்ஜெட் ஹைலைட்ஸ்

மகாராஷ்டிரா பட்ஜெட்டை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மும்பையில் வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை ரு.23,487 கோடியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் தி... மேலும் பார்க்க

இரு தொகுதிகளை குறிவைக்கும் சிற்றரசு; பின்னணியில் உதயநிதி? - யாருக்கு சீட், யாருக்கு கல்தா?

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துவருகின்றனர். கடைசி நாளான மார்ச் 6-ம் தேதி சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு வி... மேலும் பார்க்க

ADMK: கட்சிக்கு ரூட் க்ளியர்.. ஆட்சிக்கு? எடப்பாடி பழனிசாமி முன் நிற்கும் சவால் தான் என்ன?

அ.இ.அ.தி.மு.க-வை தொடங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் தொடர்ந்து வழி நடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பதவியில் கொஞ்சம் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.ஜெயலலிதா மறை... மேலும் பார்க்க

இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! - இவர்கள்தான் வேட்பாளர்களா?

திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.அக்கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அருண... மேலும் பார்க்க

``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்!" - விஜயதரணி பேட்டி

தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி.க... மேலும் பார்க்க