செய்திகள் :

தங்கத்தை விற்க திண்டாடும் 'துபாய்': தள்ளுபடியில் விற்கிறோம் 'வாங்க' என்று அழைக்கும் வணிகர்கள்!

post image

பத்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்கிறது. ஈரானில் தொடங்கிய தாக்குதல் துபாய், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா என வளைகுடா நாடுகளுக்கும் பரவி உள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மட்டும் பிரச்னை இல்லை. துபாய் தங்களிடம் இருக்கும் தங்கத்தை வணிகம் செய்யவும் சத்தமில்லாமல் தத்தளித்து வருகிறது.

ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் துபாயில் இருந்து தான் தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுவிட்சர்லாந்து மற்றும் லண்டனில் இருந்து வரும் தங்கம் கூட, துபாய்க்கு வந்த பிறகு தான் ஆசிய நாடுகளுக்குப் பயணம் ஆகின்றன.

தங்கம்
தங்கம்

தங்கத்தின் பாதுகாப்பு கருதி, அது எப்போதும் விமானத்தில் தான் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும். இப்போது துபாயில் நிலவும் பதற்றத்தால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இதனால், பிசிக்கல் தங்கத்தை துபாயால் வணிகம் செய்ய முடியவில்லை.

சாலை பயணம் சாத்தியமில்லையா?

சரி... விமானங்கள் மூலம் தான் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அருகில் இருக்கும் நாடுகளுக்கு சாலை வழியாக வணிகம் செய்யலாமே என்று பார்த்தால் அதிலும் சிக்கல் உள்ளதாம்.

சாலை வழியாக தங்கத்தை கொண்டு செல்வதற்கு அதிக செலவுகளும் ஆகும்... பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.

ஈரான் போர் நீடித்து... துபாயில் பதற்றம் தொடர்ந்தால் இந்தியா போன்ற நாடுகளுக்கு தங்கம் வந்து சேர்வதில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதனால், உள்நாட்டில் விலை அதிகரிக்கலாம்.

Bloomberg அறிக்கை

துபாயில் ஆங்காங்கே நடக்கும் குண்டுவெடிப்புகள்... ரத்தாகும் விமானங்கள் போன்றவற்றால் துபாயில் இருந்து தங்கம் வாங்க வணிகர்கள் யோசிக்கிறார்கள்.

யுஏஈயில் உள்ள தங்க நகை விற்பனையாளர்கள் மற்றும் நகைக் கடைகள், இப்போது தங்கம் வாங்க விரும்புவோருக்கு அதிகபட்ச சேமிப்பு கிடைக்கும் வகையில் தள்ளுபடிகளும் பண சலுகைகளும் அறிவித்துள்ளனர் என கல்ஃப் நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. . இது வாங்குவோருக்கு இயன்றதெல்லாம் சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது எனவும், அடுத்த வாரம் முதல் "துபாய் சம்மர் சர்பிரைசஸ்" விழாவின் போது சிறப்பு சலுகைகளும் தங்க வாங்குவோருக்கு கூடுதல் பலனாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Gold Rate: கொஞ்சம் 'குறைந்த' தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ஆகவும், பவுனுக்கு ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,950 ஆகும்.தங்... மேலும் பார்க்க

'5 நாள்களாக' இன்றும் குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,960 ஆகும்.தங்கம்... மேலும் பார்க்க

'ஆஹா, தொடர் சரிவு!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து சரிவிலேயே இருந்து வருகிறது தங்கம் விலை. தங்கம்இன்... மேலும் பார்க்க

'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold

ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிலவி வரும் இந்த வேளையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை 'கிடுகிடு' உயர்வைக் காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்... மேலும் பார்க்க

'இறங்கிட்டான்யா' தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 ஆகவும், பவுனுக்கு ரூ.2,160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.கடந்த மூன்று நாள்களாக தங்கம் பவுனுக்கு ரூ.3,680 குறைந்துள... மேலும் பார்க்க

போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை?

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர், துபாய் வரையில் நீண்டு வருகிறது. இதனால், துபாயில் இருந்து பிசிக்கல் தங்கத்தை ஏற்றுமதி செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை Reuters செய்தி ... மேலும் பார்க்க