Charlie Chaplin தமிழை விட மற்ற மொழிகளில் பெரிய ஹிட்! - Kaja Mohideen | Ajith | S...
"ஒட்டுமொத்த நாடும் என்னை விமர்சித்துக் கொண்டிருந்தது, அந்த சமயத்தில் எனக்கு.!" - கம்பீர் எமோஷனல்
டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது.
இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"இந்த வெற்றியை நான் ராகுல் டிராவிட் மற்றும் VVS லக்ஷ்மன் ஆகிய இருவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இந்திய கிரிக்கெட்டை ஒரு மிகச்சிறந்த நிலையில் ராகுல் விட்டுச் சென்றார். அதேபோல், லக்ஷ்மன் NCA மூலம் வீரர்களைத் தயார் செய்து கொடுத்தார். இந்த வெற்றிக்கு அவர்கள் போட்ட அடித்தளம் மிக முக்கியமானது.
என்னுடைய மிக மோசமான காலகட்டத்தில் , அதாவது நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தோல்விகளுக்குப் பிறகு, ஒட்டுமொத்த நாடும் என்னை விமர்சித்துக் கொண்டிருந்தது.
அப்போது எனக்கு போன் செய்து ஆதரவு அளித்த ஒரே நபர் ஜெய் ஷா மட்டும்தான். அந்த நேரத்தில் அவர் கொடுத்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
அஜித் அகர்கருக்கும் (தேர்வுக்குழுத் தலைவர்) நான் நன்றி சொல்ல வேண்டும். அவரும் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் ஒரு நேர்மையான அணியைத் தேர்வு செய்வதில் உறுதியாக இருந்தார்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. நாங்கள் பயமில்லாத கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று விரும்பினோம். அது எங்களுக்கு பலன் அளித்தது. இது ஒரு தனிமனிதரின் வெற்றி அல்ல, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்று பேசியிருக்கிறார்.

















