செய்திகள் :

சமத்துவத்தின் குரல்: அமெரிக்கப் போராட்டமும், தோழர் கிளாரா ஜெட்கினின் தீர்மானமும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனியில் தோன்றிய இரண்டு சமூக-அரசியல் இயக்கங்களான சமூகவுடைமை (சோசலிசம்) மற்றும் பெண்ணியத்திற்கான இணைப்பு புள்ளியாக கிளாரா ஜெட்கின் இருந்தார். 

பெண்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட கிளாரா ஜெட்கின் தன்னை முதன்மையாக சோசலிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்டாலும், சோசலிசப் பெண்களின் தலைவியாக முக்கியப் பங்காற்றியதால் அவர் பெண்ணியவாதியாகவே விளங்கினார்.

சமுதாயத்தின் நலனுக்கு சோசலிசம் அவசியம் என்ற நம்பிய கிளாரா ஜெட்கினின் தனது பெண்ணியக் குறிக்கோள்களை சோசலிசக் கருத்தியலின் அடிப்படையில் வரையறுத்தார். பெண்கள் தங்களது உரிமைகளை சோசியலிசம் கொண்டே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அவர் கருதினார். எனவே, அவரை சோசலிசம் பெண்ணியம் ஆகிய இரு கொள்கைகளுக்கான தலைவியாகவே  திகழ்ந்தார்.

ஜெர்மனியில் அரசியல் தலைவியாக இருந்த காலத்தில், பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திய கிளாரா ஜெட்கின் பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அளித்து அவர்களை சோசலிச இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ஊக்குவித்தார். தொழிற்சங்கங்களில் பணியாற்றிய கிளாரா ஜெட்கின் 1891-ஆம் ஆண்டு முதல் 1917-ஆம் ஆண்டு வரை டை க்ளீச்ஹீட் (சமத்துவம்)  (சமத்துவம்) என்ற சோசலிச பெண்கள் பத்திரிக்கையை நடத்தினார். அந்நாளில் ஐரோப்பாவின் மிகப்பெரிய சோசலிச அரசியல் கட்சியான ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதில் பெரும்பங்காற்றினார்.

1908-ஆம் ஆண்டுவரை ஜெர்மனியின் “சங்கச் சட்டம்” பெண்கள் அரசியல் அமைப்புகளில் சேர்வதைத் தடை செய்திருந்த போதும் கிளாரா ஜெட்கின் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார். சர்வதேச மகளிர் தினத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த கிளாரா ஜெட்கின் சர்வதேச அளவிலும் தனது தடத்தை பதித்தார்.

வர்க்கச் சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பும், பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாடுகளும் கிளாரா ஜெட்கினை சோசலிச பெண்ணிய தலைவியாக நிலை நிறுத்தியது. தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், அவர் பல உரைகள் நிகழ்த்தினார். பல மாநாடுகளில் கலந்து கொண்டார். 

 1857 ஜூலை 15 அன்று ஜெர்மனியின் சாக்சோனி பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் “கிளாரா ஐஸ்னர்” என்ற பெயரில் பிறந்த கிளாரா ஜெட்கின் சிறுவயதிலிருந்தே நன்றாக கல்வி பயின்றார். பெண் உரிமை குறித்து விழிப்புணர்வு கொண்டிருந்த தாய் ஜோசபின் ஐஸ்னரும், ஆசிரியர் ஆகஸ்டே ஷ்மிடும் கிளாரா ஜெட்கின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.

லைப்சிக் நகரில் உயர் கல்வி பயிலும் போது நாடு கடத்தப்பட்ட ரஷ்ய குழுவினரை கிளாரா ஜெட்கின் சந்தித்தார். அவர்களிடமிருந்து சோசியலிச கொள்கைகளை கற்றுக் கொண்டார். அந்தக் குழுவில் இருந்த ஓஸிப் ஜெட்கினிடம் காதல் வயப்பட்ட கிளாரா அவரை திருமணம் செய்து கொள்ளாமல் மனைவியாக வாழ்ந்து வந்தார். உயர்கல்வி கற்கும் போதே ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.

1878-ஆம் ஆண்டு “எதிர்-சோசலிசச் சட்டம்” காரணமாக ஜெர்மனியில் சோசலிசம் தடை செய்யப்பட்டது. இதனால் ஓஸிப் மற்றும் பல சோசலிசர்கள் ஜெர்மனியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஓஸிப் பாரிஸுக்கு சென்றார்; பின்னர் கிளாராவும் அவரைத் தொடர்ந்து சென்றார். பாரிஸில் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்தது. வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. கடினமான வாழ்நிலை அவர்களையும் அவர்களின் இரண்டு சிறிய குழந்தைகளையும் பாதித்தது. இந்த துயரங்களுக்கிடையே 1889-ஆம் ஆண்டு ஓஸிப் மரணமடைந்தார்.

வறுமையின் விளிம்பில் வாழ்ந்த அனுபவம், சோசலிச நம்பிக்கை கொண்ட கிளாரா ஜெட்கினை மேலும் உறுதிப்படுத்தியது. தனது துணையையும் குழந்தைகளையும் கவனிக்க அன்றாடம் வேலைக்கு சென்ற கிளாரா ஜெட்கின் தொழிலாளர் வர்க்கப் பெண்களின் உரிமைகள் குறித்து ஆழமாக சிந்திக்க துவங்கினார்.

1890-ஆம் ஆண்டு சோசலிசத் தடை நீக்கப்பட்டபின், கிளாரா ஜெர்மனிக்கு திரும்பினார். சமூக ஜனநாயக சிந்தனை களமாக விளங்கிய புகழ்பெற்ற ஸ்டுட்கார்ட் நகரில் குடியேறி சோசலிச இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

1908-ஆம் ஆண்டு முதல் 1909-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் துணி தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பெண்கள் சம கூலி, குறைந்த வேலை நேரம் மற்றும் வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் செய்த பெண் இயக்கங்களின் தாக்கம் காரணமாக 1909-ஆம் ஆண்டு அமெரிக்காவில் “தேசிய மகளிர் தினம்” அனுசரிக்கப்பட்டது. 

அதன் பின்னர் 1910-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மகளிர் மாநாட்டில் கிளாரா ஜெட்கின் உலகளாவிய அளவில் பெண்களின் உரிமைக்காக ஒரு சிறப்பு தினத்தை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அவரது முன்மொழிவு ஏகமனதாக ஏற்கப்பட்டது.

இந்த தீர்மானமே சர்வதேச மகளிர் தினம் அனுசரிப்பதற்கான அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து 1911-ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பெண்கள் வாக்குரிமை மற்றும் வேலைவாய்ப்பு சமத்துவத்திற்காகக் குரல் கொடுத்தனர். 

1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் உண்ண ரொட்டியும் வாழ அமைதியும் கோரி நடத்திய போராட்டம் ரஷ்யப் புரட்சியின் தொடங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் ரஷ்யப் பெண்களின் இந்தப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் அவர்கள் போராட்டம் நடத்திய நாளான மார்ச்-8 சர்வதேச மகளிர் தினமாக நிலைபெற்றது. இங்கனம் கிளாரா ஜெட்கின் முன்வைத்த உலக மகளிர் தினம் மார்ச்-8 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் நாளாக உருவானது.

தேர்தல்

பாரசீகம் ஈரானாக மாறிய கதை: ஒரு கலாச்சார மாற்றத்தின் வரலாறு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பஞ்சு மில்லைப் பாத்தீங்களா?-ஆத்தாவின் தேடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

யாருக்கெல்லாம் வாக்களிக்க மாட்டேன்? - என் பார்வையில் தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பள்ளி போனதே ஒரு வெற்றி - பசுமையான நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சிவனேன்னு தானே இருந்தேன்.. உதவி செய்த பாவமோ?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

80களில் தொழில் நுட்ப பயிற்சியின் சந்தோஷ சங்கீதங்கள்! - ஜில் நினைவுகள்