வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
`என்னைப் பத்தி அவங்க சொன்னதெல்லாம் பொய்னு சட்டப்படி நிரூபிச்சிட்டேன்!’ - பிக்பாஸ் தினேஷ்
சில தினங்களுக்கு முன் மோசடிப் புகார் தொடர்பாக பிக்பாஸ் தினேஷ் கைது என செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
வள்ளியூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் தினேஷ் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் எனப் புகார் தந்ததாக வெளியானது அந்தச் செய்தி.
செய்தி வெளியான உடனேயே அதை மறுத்த தினேஷ், நாய்க்குட்டி செல்வின் என்பவருக்கும் தனக்கும் இடையில் நடக்கும் ஒரு வழக்கின் தொடர்ச்சியாக அவரது தூண்டுதலின் பெயரில் தரப்பட்டிருக்கும் பொய்ப் புகார் இது எனக் குறிப்பிட்டிருந்தார். தவிர புகார் தந்தாகச் சொல்லப்படும் கருணாநிதியை தான் பார்த்ததே இல்லை எனவும் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தன் மீது போடப்பட்ட எஃப் ஐ ஆர் ரத்து செய்து முடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
தினேஷிடம் பேசினோம்.
‘காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். விசாரிச்ச போலீஸ் பொய்ப் புகார்னு சொல்லி, அதை க்ளோஸ் செய்திடுச்சு.
உடனே சம்பந்தப்பட்ட கருணாநிதி என்கிற அந்த நபர் லோக்கல் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை, சிபிசிஐடி விசாரணை வேணும்னு கோர்ட்டுக்குப் போனார். கோர்ட்டுலயும் அவரது மனு தள்ளுபடி ஆகிடுச்சு.
முதல்ல நான் கைது செய்யப்பட்டதா செய்தி வெளியானதும் என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க ,மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. எனவேதான் இப்ப இந்தச் செய்தியையும் எல்லாருக்கும் சொல்லிடலாம்னு நினைச்சேன்.
கொஞ்சம் பிரபலங்களா இருக்கிறவங்க மீது இந்த மாதிரி பொய்ப் புகார் தந்தா, அவங்க பெயர் கெட்டுப் போகுமோனு பயந்து காசு தருவாங்கனு நினைக்கிறாங்க சிலர். இந்த மாதிரி ஆளுங்களைக் கடுமையாத் தண்டிக்கனும்னு இந்த நேரத்துல அரசையும் காவல்துறையையும் கேட்டுக்கறேன்’ என்கிறார்.
















