வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
SIR: செல்லூர் ராஜூ தொகுதியில் அதிகம்! - மதுரை மாவட்டத்தில் 3,80,474 பேர் நீக்கம்!
மதுரை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன்குமார் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்பாக வெளியிட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்ததிற்கு முன்பாக 27,40,631 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 3,80,474 வாக்காளர்கள் நீக்கப்பட்ட பின்னர், பட்டியலில் 23,60,157 வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
ஆண் வாக்களர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் மதுரை மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 56,116 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. (இது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 3 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும்). குறைந்தபட்சமாக சோழவந்தான் (தனி) தொகுதியில் 22,978 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன.

100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 143 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 10 தொகுதிகளில் 40 முதல் 49 வயதிற்குட்பட்ட 5,31,288 வாக்காளர்கள் அதிகமாகவும், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 143 பேர் என்ற எண்ணிககையில் குறைந்த பட்சமாகவும் இடம்பெற்றுள்ளனர். 18 முதல் 19 வயதுடைய 20,324 இளம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் 11,58,601 ஆண் வாக்காளர்களும் 12,01,319 பெண் வாக்காளர்களும் 237 மூன்றாம் பாலினத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்
94,432 வாக்களர்கள் இறந்துள்ளனர், 38,036 வாக்காளர்கள் முகவரி மாறியுள்ளனர், 2 லட்சத்து 36 ஆயிரத்து 68 பேரும், இரட்டை பதிவுகள் கொண்ட 11 ஆயிரத்து 336 பெயர்கள், இதர காரணங்களால் 602 வாக்காளர்கள் என மதுரை மாவட்டத்தில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 404 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விவரம் :
1.சோழவந்தான் தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,29,545,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 22,978,
SIR-க்குப் பின் வாக்காளர்கள்- 2,06,567.
2.மதுரை வடக்குத் தொகுதி:
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,45,296,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 36,547,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,08,749
3.மதுரை தெற்குத் தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,23,858,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 55,760,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 1,68,098
4.மதுரை மத்தியத் தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,23,521,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 36,272,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 1,87,249

5.மதுரை மேற்குத்தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,11,043,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 56,116,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,54,927
6.திருப்பரங்குன்றம் தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,34,794,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 41,107,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,93,687
7.திருமங்கலம் தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,84,179,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 34,897,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,49,282
8.உசிலப்பட்டித் தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,86,800,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 32,358,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,54,442
9.மதுரை கிழக்குத் தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,51,779,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 35, 554,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 3,16,225
10.மேலூர் தொகுதி :
SIR-க்கு முன் வாக்காளர்கள் -2,49,816,
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 28,885,
SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,20,931













