வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
சிக்சர்களுக்கு பின் ஹர்திக் பாண்ட்யா பறக்கவிட்ட `முத்தங்கள்' - யார் இந்த மஹிகா ஷர்மா?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்ஸ்ருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 63 ரன்களைக் குவித்தார்.
இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. இதையடுத்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அநாயசமாக கையாண்ட ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்துகளில் அரைசதம் ரன்களைக் குவித்தார். இதற்கு முன்பு சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையை ஹர்திக் பாண்ட்யா முறியடித்து அந்த இடத்தைப் பிடித்திருக்கிருக்கிறார்.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு சமீபத்தில் அடிப்பட்டிருந்தது. அதனால் அவரின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதையெல்லாம் சுக்குநூறாக்கும் விதமாக தன் ஆட்டத்தால் பதிலளித்திருக்கிறார். தென் ஆப்ரிக்காவின் பந்துகளைப் பறக்கவிட்டு அரை சதம் அடித்த ஹர்திக் பாண்ட்யா, மைதானத்தில் இருந்த தனது கேர்ள் ஃபிரண்டு மஹிகா ஷர்மாவை நோக்கி முத்தங்களையும் பறக்கவிட்டார். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
யார் இந்த மஹிகா ஷர்மா?
மஹிகா ஷர்மா ஒரு இந்திய மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகை. இன்ஸ்டாகிராமில் இவரை 3.64 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். 2024-ல் இந்தியன் ஃபேஷன் அவார்ட்ஸில் 'மாடல் ஆஃப் தி இயர்' விருது பெற்றார். டெல்லியில் பிறந்து, வளர்ந்தவர். அனிதா டோங்ரே, மனிஷ் மல்ஹோத்ரா போன்ற முன்னணி வடிவமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ஹர்திக் பாண்ட்யாவுடன் நெருங்கி பழகி வருவதாக சொல்லப்படுகிறது. அதனை மைதானத்தில் பறக்கவிட்ட முத்தம் மூலம் ஹர்திக்கும் உறுதி செய்திருக்கிறார்.












