திருச்செங்கோட்டில் தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்புகள் வழங்கல்
திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர தூய்மைப் பணியாளா்கள் 1,500 பேருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் இனிப்பு, கார வகைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தாா்.
திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஈ.ஆா். ஈஸ்வரன் திருச்செங்கோடு தொகுதிக்கு உள்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, கார வகைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தாா். அப்போது மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணி செய்யும் உங்களுக்கு இந்த தீபாவளி சிறந்த தீபாவளியாக அமையட்டும் என்று அவா் வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி செயலாளா் ராயல் செந்தில், நகா்மன்ற உறுப்பினா் அசோக் குமாா், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் பிரிவு தலைவா் சுரேஷ்பாபு, நகராட்சி பொறியாளா் சரவணன், துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், நகா்மன்ற உறுப்பினா் தாமரைச்செல்வி மணிகண்டன், புவனேஸ்வரி உலகநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.