செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

post image

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு  நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் சத்திய பிராமண மனு (Affidavit)  தாக்கல் செய்துள்ளார்.

 அதில், “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்பாக சமூக பதற்றம் அதிகரிக்கும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நகர காவல் ஆணையர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பதற்றத்தால் நகர காவல் ஆணையர் கேட்ட ந் பெயரிலேயே பேருந்து நிலையம், சன்னதி தெரு, மலை நுழைவாயில், காசி விஸ்வநாதர் கோவில் நுழைவாயில், வி1 காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டது.

திருப்பரங்குன்றம் முக்கியமான மதத்தலம். கார்த்திகை தீபத் திருவிழா நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். குறுகிய வீதிகளில் கிரிவலம் நடைபெறும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பதற்றம் அதிகரித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பெரிய அளவிலான மோதலைத் தடுக்க உதவியது.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை அடிவாரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மட்டுமே தடை உத்தரவு பிறப்பித்தேன்.  பொது அமைதிக்குக் குழப்பம் விளைவிக்கும் சூழ்நிலை இருந்ததால் உடனடி நிர்வாக தலையீடு வேண்டுமென கருதினேன்.

பிரச்சனையை தீர்ப்பதற்காக தற்காலிக நடவடிக்கையாகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளை மீற வேண்டும் என்ற நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை.

நீதிமன்ற உத்தரவுகள் மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை அறிவேன். அவற்றை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை.

 அவசர சூழ்நிலையில் பொது ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாக கருதப்பட்டால், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார். எனவே இந்த விளக்கத்தை பதிவு செய்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! - என்ன செய்யப் போகிறது திமுக?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!

“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்... மேலும் பார்க்க

ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அமெரி... மேலும் பார்க்க

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட... மேலும் பார்க்க

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மா... மேலும் பார்க்க

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்த... மேலும் பார்க்க