செய்திகள் :

திரும்பும் திசையெங்கும் செவ்வாடை பக்தர்களின் ஓங்கி ஒலிக்கும் காளி கோஷம்! குலுங்கி வரும் குலசை தசரா!

post image

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குலசை என்றழைக்கப்பட்டும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குலசையை நோக்கி படையெடுப்பார்கள். இந்த ஆண்டிற்கான தசராத் திருவிழா, கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் தினமும் ஒரு திருக்கோலத்தில் அம்பிகை முத்தாரம்மன் எழுந்தருளி வீதியுலா வருவதல் நடைபெற்றது. இந்த தசராத் திருவிழாவின் முக்கிய  நிகழ்வான  மகிஷாசூரசம்ஹாரம்   இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குக் கடற்கரையில் நடைபெற உள்ளது.

சப்பர ஊர்வலம்

இத்திருவிழாவையொட்டி மாலை அணிந்து விரதம்  மேற்கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், கிருஷ்ணர், நாராயணர், அர்த்தநாரீஸ்வரர், மீனாட்சி, காமாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளி, ஆஞ்சநேயர் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களும் குரங்கு, கரடி, யாசகர் , குறவன், குறத்தி, நந்தி என, சுமார் 100-க்கும் மேற்பட்ட வேடமணிந்தும் கோயிலுக்கு வருவார்கள். சூரஹம்காரத்தைக் காண 9-ம் திருவிழாவான நேற்று மாலை முதலே பக்தர்கள் குலசையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.

இன்று இரவு 9 மணிக்கு அம்பிகை முத்தாரமன்னனுக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து மகிஷாசூரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி நள்ளிரவு 12 மணிக்குச் சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நடைபெறவுள்ளது.  அதனைத் தொடர்ந்து நாளை 21-ம் தேதி (புதன்கிழமை ) அதிகாலை 1 மணிக்குக் கடற்கரை மேடையில் அம்மனுக்கு   சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதிகாலை 2 மணிக்குச் சிதம்பரேஸ்வரர் கோயிலில் சாந்தாபிஷேகமும் நடைபெறுகின்றன.

வேடமணிந்த பக்தர்கள்

தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் காப்பு களையும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்குச் சேர்க்கை அபிஷேகமும் நடைபெறவுள்ளன. வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்குச் சிறப்புப் பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவடைகிறது. தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மார்க்கமாக வரும் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில் தனித்தனி மார்க்கமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகம் தவிர தன்னார்வலர்கள் மூலமும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அம்மன் வேடமணிந்த பக்தர்

கோயில் வளாகம், கடற்கரை, நகரின் முக்கிய வீதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் என பல முக்கியப் பகுதிகளில் பக்தர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக 200-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 4,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்து வருவதாலும் திரும்பும் திசையெங்கும் பக்தர்களின் விண்ணை முட்டும் ஓம் காளி, ஜெய் காளி கோஷத்தால் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.  

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாய்ந்த வில்வ மரம்; மீண்டும் உயர்பெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சம்பந்த விநாயகர் சன்னதி அருகே ஸ்தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. அதை பக்தர்கள் சிரத்தையுடன் வழிபடுவர். அதேபோல, பிடாரி அம்மன் சன்னதிக்கு எதிரே 100 ஆண்டுகள் பழ... மேலும் பார்க்க

இங்கு நேத்ர விளக்கு ஏற்றினால் நம் வாழ்க்கை ஒளிரும்! - சுக்ர பகவான் கொடுத்த வாக்குறுதி

தீபாவளி என்றதுமே ஒளி சிந்தும் தீபங்கள்தானே நம் நினைவுக்கு வரும்... அந்த வகையில் இந்த தீபாவளியை ஒட்டி நாமும் தீபத்துடன் தொடர்புடைய வைணவ க்ஷேத்திரம் ஒன்றின் சிறப்பை அறிவோம். சுக்ர பகவானே சரவிளக்காகத் தி... மேலும் பார்க்க

444 கிடாய்கள்; 1,800 சேவல்கள்; 16 ஆயிரம் பேர்... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரமாண்ட கறி விருந்து!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் அருகே உள்ள டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இக்கோயில். பித்தளை மற்றும் வெண்கல மணிகள் கட்டப... மேலும் பார்க்க

'பழவங்காடி கணபதி ஆசியும் ஐயப்பன் அருளும் என்னை இங்கு சேர்த்தது'- சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மண்டல காலம் தொடங்கும் சமயத்தில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பது வழக்கம். ஓராண்டு அவர் மேல்சாந்தியாக பொறுப்பு வகிப்பார். வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்... மேலும் பார்க்க

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; விண்ணை முட்டிய 'ஓம் காளி ஜெய் காளி' முழக்கம்

இந்தியாவில் கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் -முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி தசரா திருவிழா ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஷார்ட்ஸ்’ அணிந்த பெண்களுக்குத் தடை; வேட்டி கட்டிய பிறகு சாமி தரிசனத்துக்கு அனுமதி!

புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். அதனால் புதுச்சேரிக்கு வரும் அயல்நாடு மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தவறாமல் அங்கு சென்று விநாயகரை தரிச... மேலும் பார்க்க