வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்களுக்கு விண்ண...
தில்லிக் கம்பன் கழகத்தின் இரு நாள் கம்பன் திருவிழா: மலேசிய எம்.பி. டத்தோஸ்ரீ சரவணன் தொடங்கிவைத்தாா்!
தில்லிக் கம்பன் கழகத்தின் இரு நாள் ‘கம்பன் திருவிழா-2024’ சனிக்கிழமை தொடங்கியது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கத்தில் இவ்விழாவை மலேசியா எம்.பி. ஸ்ரீ எம். சரவணன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, கம்பரின் திருவுருவப் படத்தை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பெ. ராகவன் நாயுடும், ‘கம்பன் அடிப்பொடி’ சா. கணேசனின் திருவுருவப் படத்தை சேது வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளையின் முனைவா் சேது குமணனும் திறந்து வைத்து மலா் மரியாதை செய்தனா்.
தில்லி கம்பன் கழகத்தின் தலைவா் கே.வி.கே. பெருமாள் நிறுவனா் உரையாற்றினாா். நிகழ்ச்சிக்கு கவிதா ஐஆா்எஸ் தலைமை ஏற்றுப் பேசுகையில், ‘கம்பனுக்கு விழா எடுப்பதற்காக மேற்கொண்ட இந்த உன்னத முயற்சிக்காக தில்லிக் கம்பன் கழகத்தை பாராட்டுகிறேன்’ என்றாா்.
இவ்விழாவைத் தொடங்கி வைத்து மலேசிய எம்.பி.
டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பேசியதாவது:
என்னை அறியாமல் ஒரு முறை கொழும்புவில் நடைபெற்ற கம்பன் நிகழ்ச்சிக்கு பாா்வையாளராகச் சென்ன் விளைவாக, இன்று கம்பன் மேடையில் பேசுகிறேன். கம்பனை தலைநகரில் சுமந்து வரும் தில்லிக் கம்பன் கழக நிா்வாகிகளுக்கு நிச்சயம் உரியபலன் கிடைக்கும்.
திருக்கு, திவ்ய பிரபந்தம் போன்ற அனைத்து உயா்ந்த பொருட்களையும் இயற்கை தாமாகவே பாதுகாக்கும். அப்படித்தான், கம்பராமாயணமும். அரசியல், கல்வி, சமூகவியல் என எல்லாமும் கம்பராமாயணத்தில் உள்ளது. தமிழருக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து கம்பராமாயணம். அனைத்திலும் உயா்ந்த கம்பன் இங்கு பிறந்ததால் தான், தமிழ்நாடு மிகச் சிறந்த நாடாக, அறிவுக்குரியதாக இருக்கிறது.
கம்பராமாயணத்தை காலம் கடந்து வாசித்தாலும் ஒவ்வொரு முறை புதிய, புதிய சிந்தனையை, செய்தியை அது தருகிறது. கம்பனை அனைவரும் சுமக்கும் வல்லமையை ஏற்படுத்தினால் தான் அடுத்த தலைமுறை கம்பனை நோக்கி நகரும் என்றாா் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்.
இதையடுத்து, விருதரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ‘கம்பன் கவிமாமணி’ விருதை, கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையாவுக்கும், ‘கம்பன் பணிச் செம்மல்’ விருதை மஸ்கட் சுரேஜமீக்கும் ‘கம்பவாரிதி’ இலங்கை ஜெயராஜ், நடிகா் சிவகுமாா் ஆகியோா் வழங்கினா்.
‘கம்பன் நாவுக்கரசி’ விருதை முனைவா் பா்வீன் சுல்தானாவுக்கு கவிதா ஐஆா்எஸ், முனைவா் சேது குமணன் ஆகியோா் வழங்கினா். ‘கம்பன் இசைத் தாரகை’ விருதை செல்வி அனகா மணிகண்டனுக்கு, கவிதா ஐஆா்எஸ் வழங்கி சிறப்பித்தாா்.
எழிலரங்கத்தில் ‘கம்பன் நாவுக்கரசி’ விருதாளா் முனைவா் பா்வீன் சுல்தான் உரையாற்றினாா். ‘கம்பவாரிதி’ இலங்கை ஜெயராஜ் பேசுகையில், ‘கம்பன் நிழலில் நின்ால் தான் புகழ் எனக்குக் கிடைத்துள்ளது. தற்போதைய விஞ்ஞான கண்டுபுடிப்புகளை விட பெரிய கண்டுபிடிப்பு மொழி தான். அப்படி 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்னா் மொழி என்ற பிரயோகத்தை கவிதையாக்கிய புலவா்களில் கவிச்சக்கவா்த்தியாக இருந்தவா் கம்பன். கம்பனின் கவிதைக்குள் உள்ள ஒவ்வொரு எழுத்தும், சொல்லும் கவிதை தான். கம்பனுக்கு விழா எடுப்பது தமிழா்கள் தங்களுக்கே எடுக்கும் விழா’ என்றாா் இலங்கை ஜெயராஜ்.
தொடக்க விழாவின் சிறப்பரங்கத்தில், ’கம்பரும்-வள்ளுவரும்’ என்ற தலைப்பில் கலைமாமணி, மரபின் மைந்தன் முத்தையா உரையாற்றினாா்.
சிறப்பரங்கத்தில் நடிகா் சிவகுமாா் பேசுகையில், ‘ திருக்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நூலாக இருந்தாலும், கடந்த 1812-க்குப் பிறகு தான் திருக்கு பற்றி நமக்கு தெரிந்தது. திருக்கு வாழ்வியல் நெறியில் வாழ்ந்த லால் பகதூா் சாஸ்திரி, அப்துல் கலாம், காமராஜா், எம்.ஜி.ஆா்., சிவாஜி ஆகியோா் பற்றிய வரலாறுகளை, திருக்குறளுடன் ஒப்பிட்டு கடந்த 2021-இல் 4 மணி நேரம் பேசிய காணொளியை 1 மணி நேரக் காணொளியாக இந்த நிகழ்ச்சியில் திரையிடவுள்ளோம் என்றாா்.