`எழுத்தாளர் அகதா கிறிஸ்டி மாயமான 11 நாட்கள்' நிஜ வாழ்க்கையில் நடந்த மர்மக்கதை! -...
துலாம் : 2026 ராகு-கேது பெயர்ச்சி: இனி தொட்டது துலங்கும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்
1. விலகிச்சென்றவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வரும் சூழல் உண்டாகும். உங்கள் அருமையை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நல்லவிதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

2. இதுவரையிலும் உங்களை வாட்டிவைத்துக்கொண்டிருந்த வீண் பயம் அகலும். சகோதர, சகோதரிகளிடையே மனஸ்தாபங்கள் நீங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்தவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
3. சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். எனினும், தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டு குணமாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக் கசப்பும் வந்து நீங்கும்.
4. ராகு செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்போது (5.12.26 முதல் 11.3.27 வரை) எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் வரக்கூடும். ஓரளவு பணவரவு உண்டு. சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும்போது (11.3.27 முதல் 18.12.27 வரை) புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய பதவிகள் தேடி வரும்.
5. சூரியனின் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது (18.12.27 முதல் 23.6.28 வரை) தொட்டது துளிர்க்கும். அரசு அதிகாரிகளின் நட்பு கிட்டும். தந்தை வழிச் சொந்தங்களால் ஆதாயம் உண்டு.
6. கேது உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார். பிரச்னைகளின் ஆணி வேரைக் கண்டறிந்து களைவீர்கள். மனதில் புது சிந்தனைகள் பிறக்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். அதேநேரம், காரியங்களை முடிப்பதில் அலைக்கழிப்பு உண்டு.
7. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். என்றாலும் வீண் கௌரவத்திற்காகக் கையிருப்பைக் கரைக்காதீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.
8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சனியின் நட்சத்திரத்தில் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, தொட்டது துலங்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். குருவின் நட்சத்திரத்தில் செல்லும்போது (22.4.28 முதல் 23.6.28 வரை) தன்னம்பிக்கை துளிர்விடும்.
9. இல்லத்தரசிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. நவீன விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பாலும் உதவியாலும் ஆதாயங்கள் உண்டாகும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். முக்கிய பொறுப்புகள் தேடி வரும்.
10. உத்தியோகத்தில், உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு.
11. கணினித் துறையில் இருப்பவர்களுக்கு, அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.













