செய்திகள் :

தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!

post image

தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியுள்ளார். இந்த மின் இணைப்பு சம்பந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வி.கே புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.

கைதானவர்கள்

அப்போது அதற்கான ஆவணங்கள் மற்றும் ரூபாய் 10,000 பணத்துடன் தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை கொடுக்க முடியாததால் குறைத்து கூறுமாறு கூறிய நிலையில், ரூபாய் 7,000 கொடுத்தால் தான் மீட்டர் பொருத்துவேன் என இளநிலை பொறியாளர் திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது.

லஞ்சம்
லஞ்சம்

இந்நிலையில் லஞ்ச பணத்தை கொடுக்க முடியாததால் செல்வகணேஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் பணத்தை இளநிலை பொறியாளர் தனது நண்பர் துரையிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் ரசாயனம் பவுடர் தடவிய ரூபாய் 7,000 கொடுக்கும் பொழுது கையும் களவுமாக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இளநிலை பொறியாளர் பிரேம் மற்றும் அவரது நண்பர் துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!

சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்... மேலும் பார்க்க

Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே ... மேலும் பார்க்க

மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!

'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர்... மேலும் பார்க்க

`பைனான்ஸ்' வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார்... மேலும் பார்க்க

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொத... மேலும் பார்க்க

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க