செய்திகள் :

தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது! - அருகருகே அமர்ந்திருக்கும் விஜய், டி.கே சிவகுமார்!

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது 'தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு' சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், தென் மாநிலங்களின் முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

விஜய் - அமித்ஷா
விஜய் - அமித்ஷா

இதில் பங்கேற்பதற்காக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் விஜய் நேரில் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் சந்தித்து பேசினர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக பங்கேற்றிருக்கிறார்.

தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

இதில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இந்த தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமாரும், தமிழக முதல்வர் விஜய்யும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர்.

தென் மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நதிநீர் மற்றும் எல்லை தொடர்பான பிரச்சனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

குறிப்பாக மேகதாது அணை விவகாரம், முல்லைப்பெரியாறு அணை பிரச்னை, காவிரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனைகள், போதை பொருள் கடத்தல், சட்டம் ஒழுங்கு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும், ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவெகவுக்கு முன்னாள் அதிமுக வேட்பாளர்; அதிமுகவுக்கு முன்னாள் திமுக வேட்பாளர்! - இது எடப்பாடி ஸ்கெட்ச்

பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் தவெக இடையிலான போட்டி புதிய அரசியல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன... மேலும் பார்க்க

அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் - தனிக்கவனம் பெற்ற வன்னிஅரசு - நெருக்கடியில் நயினார்! | கழுகார்

அட்டூழியம் செய்யும் காவல் அதிகாரி!"வி.ஐ.பி-க்குத்தான் வேலை செய்வேன்..."தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் 'முருகக் கடவுள்' அதிகாரி, பொதுமக்களை சந்தித்து புகார்களை வாங்குவதில்லையாம். அதோடு, தனக்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆருக்கு ’புரட்சித் தலைவர்’ பட்டம் சூட்டிய கே.ஏ கிருஷ்ணசாமி மகன் அதிமுக-வில் இருந்து விலகல்!

தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து அதிமுக-வில் முக்கியப் பதவிகளில் இருந்த சிலர் அங்கிருந்து விலகி தவெகவில் சேர்ந்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.எம்.எல்.ஏ க்களாக இருந்த விஜயபாஸ்கர்கள் தொடங்கி கட்சியி... மேலும் பார்க்க

`பென்ஸ், எட்டியோஸ், டிகார்... சொந்தமாக கார் இருந்தும்!' - எம்எல்ஏ-க்கள் குறித்து வெளியான தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ``நான் 250 கி.மீ தூரத்திலிருந்து வருகிறேன். கார் வசதி இல்லை. வாடகை வாகனத்தையே நம்பவே... மேலும் பார்க்க

`அடுத்த பிரதமர் விஜய்?' - திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் என்ன?

இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறிவரும் நிலையில், 'இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்' என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியிருக்கிறா... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்.!" - வைகோ நம்பிக்கை!

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அம... மேலும் பார்க்க