`பென்ஸ், எட்டியோஸ், டிகார்... சொந்தமாக கார் இருந்தும்!' - எம்எல்ஏ-க்கள் குறித்து...
`அடுத்த பிரதமர் விஜய்?' - திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் என்ன?
இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறிவரும் நிலையில், 'இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்' என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியிருக்கிறார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழியிடம் இந்தியாவின் அடுத்த பிரதரமர் ஜோசப் விஜய் தான் என்று தவெகவினர் கூறிவருகின்றனர். அடுத்த பிரதமர் விஜய்யா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்த கனிமொழி, " இதற்கு காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது முக்கியம் அல்ல.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்த போது எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என்று காங்கிரஸ் கூட சொல்லாத காலகட்டத்தில் அறிவித்தவர்.
இன்று கூட்டணியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட அறிவிப்பை செய்யும் போது காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த நண்பர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.













