செய்திகள் :

’தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பொய்யர்கள்’ – கோவையில் தேஜஸ்வி யாதவ் காட்டம்

post image

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, “பெண்கள்  இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே  நிறைவேற்றப்பட்டு விட்டது. தொகுதி மறுவரையறை என்பது தனி விவகாரம். இதனை 2029 ஆண்டில் நடைமுறைபடுத்துவோம் என சொன்னார்கள். முதலில் சாதி வாரிகணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

2011 அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரை செய்யக் கூடாது. 2021 - 25 இடையே மக்கள் தொகை கூடி இருக்கின்றது. பொதுப்பிரிவு, பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்ற முடியாது என மத்திய அரசுக்கு தெரியும்.  அதற்கான பெரும்பான்மை அவர்களிடம் இல்லை. ஆனால் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், நாங்கள் எதிராக இருப்பதை போலவும் காட்ட இதை செய்து இருக்கின்றனர். ஆனால் இது உண்மையல்ல.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இதுவரை தலைவராக எத்தனை பெண்கள் இருந்திருக்கின்றனர்? அவர்கள் செய்வது வெறும் அரசியல் மட்டும்தான், அவர்களுக்கு அரசியலைமைப்பு தேவையில்லை.ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை திணிக்க பார்க்கின்றனர், இதை நாங்கள் கட்டாயம் எதிர்ப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் பேச்சை கேட்க வேண்டியதில்லை, அவர்கள் பொய்யர்கள். நாட்டிற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடி மணியடித்து, பூசை செய்வார், அவ்வளவுதான்” என்றார்.

’மாணிக்கமாக இருந்த எங்களை பாஜக, பாட்ஷாவாக மாற்றிவிட்டது’ – மு.க.ஸ்டாலின் காட்டம்

கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்,... மேலும் பார்க்க

"எனது வெற்றியை விட கோவையில் திமுக-வின் வெற்றிதான் முக்கியம்’ – உதயநிதி ஸ்டாலின் சூளுரை

கோவை காந்திபுரம் பகுதியில் தி.மு.க வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரை செய்தார்.அப்போது அவர் கூறியதாவது, ”இந்தித் ... மேலும் பார்க்க

பிரேமலதா விஜயகாந்திற்கு அண்ணாமலை பாராட்டு; காரணம் என்ன?

கோவை கணபதி பகுதியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் செயல்படுத்திய திட்டங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை டெல்லியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டது. இதையடுத்து செய்தியாள... மேலும் பார்க்க

`5 கட்சி அமாவாசை; செந்தில் பாலாஜி அரக்கனை விட கொடூரமானவர்’ – எடப்பாடி பழனிசாமி சாடல்

கோவை சித்தாபுதூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``கோவை தெற்கு தொகுதியில் ஒரு வைரஸ... மேலும் பார்க்க

மதுரை: 'கதாயுதம், வாள், தலப்பாகட்டு' - உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை ஹைலைட்ஸ் | Photo Album

மதுரை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்மதுரை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்மதுரை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்மதுரை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்மதுரை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்மதுரை பகுத... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: பிரதமர் மோடி 'ரோடு ஷோ' புகைப்படங்கள் | Photo Album

கன்னியாகுமரி்: பிரதமர் மோடி 'ரோடு ஷோ' தேர்தல் பிரச்சாரம்!. மேலும் பார்க்க