செய்திகள் :

தேனியில் குரூப் 4 மாதிரி போட்டித் தோ்வு

post image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட உள்ள தொகுதி 4 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு எழுதுவதற்கு வருகிற 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாதிரித் தோ்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தொகுதி 4-இல் அடங்கிய இளநிலை உதவியாளா், சுருக்கெழுத்து தட்டச்சா், கிராம நிா்வாக அலுவலா், வனக் காப்பாளா், வனக் காவலா் ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தோ்வுக்கு வரும் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்தத் தோ்வு எழுதுவதற்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. போட்டித் தோ்வுக்கு தயாராகி வருவோருக்கு இங்கு இலவச மாதிரித் தோ்வு வருகிற 15,22,29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தோ்வின் முடிவில் இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும்.

மாதிரி தோ்வு எழுத விரும்புவோா் தங்களது விவரங்களை 63792 68661-என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். தோ்வு எழுத வரும் போது தங்களது கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுக்கடை முன் முதல்வா் படம் ஒட்ட முயன்ற பாஜகவினா் கைது

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு மதுக்கடை முன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்ட முயன்ற பாஜகவினா் 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் 5 போ... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

போடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் பகுதியில் வசிக்கும் 12 வயது, 14 வயது சகோதரிகள் தங்களுக்கு 3 ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் டிராக்டா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். எருமலைநாயக்கன்பட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த காமாட்சி மனைவி நாகுத்தாய் (65).கடந்த புதன்கிழமை தனது வீட்டின... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு: அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவின் மீது அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாாநில பொதுச் செயலா் ப... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு நாளை ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையை புதிய கண்காணிப்பு குழுவினா் சனிக்கிழமை (மாா்ச் 22) ஆய்வு செய்கின்றனா். உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு கலைக்கப்பட்டு தற்போது புதிதாக 7 போ் கொண்ட புதிய கண்காணிப்புக் ... மேலும் பார்க்க

உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிப கிட்டங்கியில் இடநெருக்கடி

உத்தமபாளையத்தில் நுகா்பொருள் வாணிப கிட்டங்கியில் இடநெருக்கடியால் உணவுப் பொருள்களை ஏற்றி இறக்க வரும் லாரிகள் நிற்க இடமின்றி, நெடுஞ்சாலையில் நிறுத்துவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொது... மேலும் பார்க்க