செய்திகள் :

தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: "காவலரின் தங்க செயின் பறிப்பு" - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

post image

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய விவகாரத்தில், நேற்று (அக்டோபர் 26 ஆம் தேதி) இரவு பணியில் இருந்த சிறை காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார்.

தேனி மாவட்ட தக்கம்பட்டியில் அமைந்துள்ள கிளைச் சிறையில் 17 கைதுகள் சிறைகாவலர்களைத் தாக்கி தப்பியதில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் எஞ்சி உள்ள 13 பேரை தேனி, திண்டுக்கல், கேரளா ஆகிய பகுதிகளில் 10 தனிப் படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், "தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறைச்சாலையில் அக்டோபர் 26-அன்று இரவு சுமார் 10:50 மணியளவில் மதன்மோகன்- முதன்மைத் தலைமை வார்டன், ஸ்டாலின் பிரபு- மூன்றாம் மற்றும் நான்காம் பிளாக், பிரபு-கணினி பிரிவு, தங்கப்பாண்டி -பிரதான நுழைவாயில் ரமேஷ் 1 மட்டும் 2 -ம் பிளாக் ஆகியோர் இரவுப் பணியில் சிறை காவலர்களாகப் பணியில் இருந்துள்ளனர்.

தேனி சிறை
தேனி சிறை

சிறைகைதிகள் இச்சம்பவத்தின்போது சிறைச்சாலையின் மூன்றாம் ப்ளாக்கில் 92-விசாரணை சிறைவாசிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் முத்து இளங்கோவன் என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற சிறைவாசிகள் கூச்சலிட்டதால் அங்கு பணியில் இருந்த காவலர் ஸ்டாலின் பிரபு மற்றும் முதன்மைத் தலைமை வார்டன் மதன்மோகன் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார்.

பின்பு அங்கிருந்த விசாரணை சிறைவாசிகள் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள போர்வையைப் பயன்படுத்தி சிறைகாவலர் ஸ்டாலின் பிரபு, முதன்மைத் தலைமை வார்டன் மதன் மோகன் ஆகியோரைத் தாக்கிவிட்டு அறைக்குள் தள்ளிவிட்டு அதனைத் தொடர்ந்து மூன்றாம் பிளாக்கின் கதவைத் திறந்து சிறைவாசிகள் பிரதான நுழைவாயில் நோக்கி ஓடியுள்ளனர்.

இதற்கு சக கைதிகளான மீனாட்சி சுந்தரம், திருப்பதி, கருப்பசாமி ஆகியோர் உதவி இருக்கிறார்கள்.

பின்னர் சுமார் 11:05 மணிக்குப் பிரதான நுழைவாயில் தாழ்பாலைத் திறந்து 17- சிறைவாசிகள் சிறைச்சாலையை விட்டு தப்பித்து சென்றிருக்கிறார்கள். தப்பிச் செல்லும்போது தலைமை வார்டன் மதன் மோகன் அணிந்திருந்த சுமார் ஒன்றை பவுன் தங்கச் சங்கிலி பறித்து சென்றிருக்கிறார்கள்.

தாக்குதலில் காயமடைந்த சிறை காவலர் தங்கப்பாண்டி தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்" எனக் கூறப்பட்டிருக்கிறது.

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம்; முடிவுக்கு வந்த பெற்றோர் போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ச... மேலும் பார்க்க

அசாம்: குத்தகைக்கு விட்ட ஹோட்டலைத் திரும்பக் கொடுக்க மறுப்பு; உரிமையாளர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிலாஸ் இன் என்ற ஹோட்டலை கனகாந்த கோகோய் என்பவர் ஹெலனா பராலி என்பவரிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பாக ஹெலனாவிற்கும், குத்தகை... மேலும் பார்க்க

மும்பை: முற்றிய கணவன் மனைவி சண்டை; 9 மாத குழந்தை நடைமேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிப்பட்ட கொடூரம்

மும்பை காட்கோபர் சர்வோதயா நகரில் வசித்து வந்தவர் ஆர்த்தி. விட்டில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது 9 மாத ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவர் பயணிகள் நடந்து செல... மேலும் பார்க்க

`கழுத்தில் கயிறு தழும்பு, வாயில் ரத்தம்’ - மேலூரில் 7 வயது சிறுவன் கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகருப்பன் - சந்தியா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துவேலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. ப... மேலும் பார்க்க

இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

காதலியை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரி முன் விழுந்து காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரிதிருப்பத்தூர் மாவட்டம், ஜோல... மேலும் பார்க்க

சேலம்: பட்டப்பகலில் விரட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்... முன்விரோதம் காரணமா? - போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரௌடி டேவிட் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின்... மேலும் பார்க்க