செய்திகள் :

தேர்தல் சீர் வரிசை! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

போர்வெல் பைப்பில்   சிரமப்பட்டு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள்  சுந்தரி அக்கா. நாலுகுடங்களை எடுத்துக் கொண்டு  சிரித்தபடி அங்கே வந்த ராணி'என்னக்கா அடிச்சாச்சா? ஏன் இப்படி மூச்சு இரைக்குது,தள்ளு கொஞ்சம் நான் அடிக்கிறேன்' என்றாள்.

 'வேண்டா ராணி! இன்னும் ரெண்டு கொடம் தான்.நானே அடிச்சிக்கிறேன். உனக்கும் அடிக்கணும் இல்லையா. கஷ்டமாக இருக்கும் விடு பார்க்கலாம்'  என்றாள் சுந்தரி.

           'அட இதிலென்னக்கா கஷ்டம் ?

இத்தனை நேரம் வெட்டியா உட்கார்நது டிவி தான் பார்த்துட்டு இருந்தேன். தள்ளி நில்லு. நானே  பம்ப் அடிக்கிறேன்' என்று அடிக்கத் தொடங்கினாள்.

           'ஆமாக்கா   நானே வீட்டுக்கு வந்து கேக்கலாமுன்னு  நினைச்சுட்டு இருந்தேன். சவிதா  கல்யாண  வேலை எல்லாம் எப்படிப்போகுது? ரொம்ப   பொலம்பிட்டிருந்தியே. ஏதாவது வரவு வந்துச்சா? நான் கூட என்ர கொழுந்தியா  தாயம்மா கிட்ட சொல்லி வச்சிருக்கேன். கடைசி நேரத்துல  முடியாம  போச்சுன்னா ஏற்பாடு பண்ணித் தர்றேன் னு சொல்லிருக்கா.. அப்படி ஏதாவது தேவைப்பட்டா சொல்லு பாத்துக்கலாம். ரொம்ப  சிரமப்படாதே  என்றாள்.

சிரமப்படாம   எந்த வேலையும் நடக்காது ராணி. எப்படியோ கஷ்டப்பட்டு பொண்ணுங்க ரெண்டு பேரையும் படிக்க வெச்சாச்சு.ரெண்டு பேரும்  நல்லபடியா  வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க.  சவிதா  கட்டிக்கப்போற  மாப்பிள்ளை வீட்டுலேயும் எல்லாரும்  நல்ல சனங்க தான்.  இருந்தாலும் நம்ம தகுதிக்கு தக்கபடி நாமளும் செஞ்சுட்டாத்தான் நல்லது .

எங்க அக்காவும் தங்கச்சியும் கொஞ்சம்  சப்போர்ட்   பண்ணுவாங்க.

 தேர்தலுக்கு  ஓட்டுப்போட கட்சிக்காரங்க    கொடுத்த அண்டா குண்டா பாத்திர பண்டம் மத்த பொருள்கள்  எல்லாத்தையும் வீட்டுலே கொண்டு வந்து வெச்சு  சீர்வரிசை செய்யச்சொல்லிட்டாங்க. வேட்பாளர்கள் குடுத்த  பணத்து கூட கொஞ்சம் பணமும் சேர்த்து பரிசுக்கூப்பனெல்லாம் சேர்த்துக் குடுத்துட்டுப்போனாங்க.. இதை எல்லாம் வெச்சு சீர்வரிசை முறையை ஒப்பேத்திடலாம். நகை நட்டெல்லாம் என்னுது கொஞ்சம் இருக்குது. பொண்ணுகளும் கொஞ்சம் சம்பாதிச்சு வெச்சிருக்காங்க .

சவிதா காரியத்த  எப்பிடியும்  சமாளிச்சிடலாம்.. ஆனா இந்தக்  சரிதா......என்று இழுத்தாள் சுந்தரி அக்கா.

ஏக்கா  சரிதாவுக்கு என்னாச்சு?

 "உனக்குத்தெரியாததில்லே ராணி!சரிதாவுக்கு ஒரு பையனோட பழக்கமிருக்கு. அவங்க வீட்டுலேயும்  ஒத்துகிட்டாங்க.  ஆனா சவிதாக்கு செய்யற மாதிரி மூணு நாலு மடங்கு செய்யச்சொல்லி எதிர்பார்க்கறாங்க.. கல்யாணத்தையும் சீக்கிரமா முடிக்கணுமாம். இதைக்கேட்ட  பிறகு சரிதாவுக்கு மனசு தடுமாறுது போலத்தெரியுது.இப்பவே இப்படின்னா  பின்னால சமாளிக்க முடியுமான்னு யோசிக்கறா. சில சமயம் வேண்டாம் னு கூட  சொல்றா ராணி..அதான் மனசு கெடந்து தவியா தவிக்குது."

'ரொம்ப குழம்பி  தவிக்காதக்கா. உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும்.

     குடமெல்லாம் நிறைஞ்சிருச்சு. எடுத்து நகர்த்தி வையக்கா " என்றாள் ராணி.

       'அதில்ல ராணி.......... என்று இழுத்தாள் சுந்தரி அக்கா...

  'பேசாதக்கா. புனிதாவும் வசந்தியும் வர்றாங்க.  மீதியை வீட்டுலே  பேசிக்கலாம்  கிளம்பு' என்றபடி  குடத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் ராணி..

சுந்தரியும் குடங்களுடனும் குழம்பிய மனத்துடனும் வீட்டுக்குப்போனாள்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மாப்பிள்ளை இளங்கோவும்  சம்பந்தி அம்மாவும்  அவரது தங்கச்சியும் எதிர் பாராமல் வீட்டுக்கு வந்தனர்.   வீட்ல  யாருமில்லாத சமயத்தில்   சுந்தரிக்கு கையும் ஓடவில்லை  காலும்  ஓடவில்லை.

வரவேற்று உட்கார வைத்து விட்டு காப்பி கலக்க நகர்ந்தாள்.

அவளைத் தடுத்து உட்காரச் சொன்ன சம்பந்தி  'தங்கச்சி உங்களை பார்க்கணும்னு சொன்னதால வந்தோம்.வர்ற வழியில  ராணி வீட்டுல  காப்பி  குடிச்சிட்டுத்தான் வர்றோம். நீங்க வந்து உட்காருங்க  'என்றபடி இளங்கோவைப்பார்த்து 'தம்பி  பேச வந்ததை சொல்லிடுப்பா  'என்றார்.

'அத்தை! எங்க சித்தி பையன் கதிர் அன்னிககு   எங்க  கூட வந்தப்ப  நம்ம சரிதாவைப் பார்த்திருக்கான்.. அவனுக்கு சரிதாவை பிடிச்சிருக்கு ..  சித்திக்கும் இதில  ரொம்ப இஷ்டம். அதான் உங்க அபிப்பிராயத்தை கேட்டுட்டுப் போக வந்தோம்.'

'அதில்ல  மாப்பிள்ள  சரிதா  வந்து.... "பேச முடியாமல் திணறினாள் சுந்தரி.

' எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கோம்..சரிதாகிட்டயும் பேசிட்டு சொல்லுங்க. மறுபடி பேசி முடிவுக்கு வரலாம் .'   என்றார் இளங்கோவின் சித்தி..

 'அப்போ  நாங்க  கிளம்பறோம்.சீக்கிரமே   ஒரு நல்ல முடிவை  சொல்லுங்க. 'எழுந்தனர்  வந்தவர்கள்.

'சுந்தரி அக்கா நான்சரிதாகிட்ட பேசிட்டேன். முழுசம்மதம் சொல்லிட்டா.நீ   உங்க வீட்டுக்காரர் கூடப்பேசிட்டு  இவங்களுக்கு பதில் சொல்லிடு  சரியா 'என்றபடி வந்தாள் ராணி.

 வாசல் வரை சென்றுவிட்டு திரும்ப  வந்த இளங்கோ 'அப்புறம் அத்தை  இந்த சீர்வரிசைப் பொருளை எல்லாம் அதான் அந்த தேர்தல் சீர் வரிசையைத்தான் சொல்றேன் திருப்பிக் கொடுத்திடுங்க . எங்களுக்கு வேண்டாம் ,  இல்லையில்லை நமக்கு வேண்டா.

பொண்ணுங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வச்சிருக்கீங்க வேலைக்கும் போறாங்க. குடும்ப  சூழ்நிலை ,வெளி உலகம்  ,நல்லது கெட்டது தெரிஞ்சவங்களா வளர்ந்திருக்காங்க

அது போதும் அத்தை! '

 'இல்ல மாப்பிள்ள! சவிதாவுக்கு தேவையானதை கொஞ்சமாவது கொடுத்தா  தான்  நல்லா இருக்கும்.அதுக்குத் தான் அக்காவும் தங்கச்சியும் உதவறேன்னு சொன்னாங்க. வேறொன்னுமில்லே ' என்றபடி சம்பந்தியைப் பார்த்தாள் சுந்தரி...

   யாருகிட்டயும் கடனோ உதவியோ  கேட்கவேண்டா... கல்யாணத்தை சிம்பிளா செய்யலாம்..கவர்மெண்டு கொடுக்கிற சலுகைகளை ஏத்துக்கலாம்,  கட்சிக்காரங்க கொடுப்பதை வாஙகக் கூடாது. எங்களுக்குஉங்க பொண்ணு மட்டும் போதும்.. மாப்பிள்ளையும் பொண்ணும் ரெண்டு குடும்பத்தையும்அனுசரிச்சுப்

போறவங்களா இருந்திட்டா அதுவே

 நமக்கு கிடைக்கிற சீர்வரிசைதான்... அதனாலே  மனசையும் உடம்பையும் அலட்டிக்காம தெம்பா இருங்க சம்பந்தி , " என்றார் மாப்பிள்ளையின் அம்மா.

       தலையசைத்து ஆமோதித்தார் அவரது தங்கச்சி. மாப்பிள்ளை  இளங்கோ சிரித்தபடி சுந்தரியைப் பார்த்தார்.

என்னக்கா சந்தோக்ஷமா?! இப்ப எப்படி இருக்கு?என்றாள்ராணி.

'இருநூத்து முப்பத்து நாலு  தொகுதியிலும்  ஒத்தையாளா நின்னு ஜெயிச்சது மாதிரி இருக்கு ராணி ,' மகிழ்ச்சியுடன் சொன்னார் சுந்தரி..

' அப்படீன்னா வா  , வந்து இன்னைக்கு  எனக்கு போர்வெல்

பம்ப் பில் நாலுகுடம்  தண்ணி அடிச்சுக்குடு  சரியா,'என்றாள்  ராணி.

அங்கே எல்லோரும் சேர்ந்து குலுங்கி சிரித்த  சிரிப்பின் சத்தம் போர்வெல் பம்ப் வரை கேட்டது.... தேர்தல் சீர்வரிசை பொருட்களும்  அந்த சத்தத்தில்  செய்வதறியாது குலுங்கின.

-நீலவேணி தேவராஜன்,

   கோயமுத்தூர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

அறிவியலின் ஒளி, அங்கீகாரத்தின் நிழல் – 'டி.என்.ஏ நாயகி' ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சிரிப்புச் செடி... சிந்தனை மரம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'குழந்தைகள் புத்தகங்களோடே பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்' - டோமாயி சிறார் நிறுவனர் பிரியதர்ஷினி

புத்தகங்கள் நம் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கு உற்ற துணைபுரிகிறது. இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கின்றனர். வாசிப்பினை ஊக்குவித்தும் ... மேலும் பார்க்க

அரசியல் வியாபாரத்தைத் தடுக்கும் ஒரே ஆயுதம்! - இது பொதுமக்களின் சாட்டை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோட்டைக்குச் செல்லும் வழி! - தமிழகத்தின் புதிய அரசியல் பரிணாமம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சமூகத்தின் தேவை வெறும் பட்டதாரி அல்ல! - சான்றிதழ்களைத் தாண்டிய ஒரு தேடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க