செய்திகள் :

தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது' - கலங்கிய சீமான்!

post image

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேவா உடலுக்கு இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எளிமையும் இனிமையும் கொண்ட மிகச் சிறந்த மனிதரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களோடு இணைந்து பணியாற்றிய காலங்கள் அனைத்தும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளாகும்.

தேவா
தேவா

நினைவை விட்டு நீங்காத எண்ணற்ற இசை வடிவங்களை அவர் தமிழ் சினிமாவிற்கு வார்த்துக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக, 'பாஞ்சாலங்குறிச்சி', 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'வாலி', 'ஆசை', 'குஷி', 'நேருக்கு நேர்' ஆகிய திரைப்படங்களில் அவர் அமைத்துக் கொடுத்த வகை வகையான இசை வடிவங்களை எவராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர் யாரிடமும் உரத்துப் பேசியோ அல்லது கோபப்பட்டோ யாருமே பார்த்ததில்லை. அவர் மட்டுமன்றி, அவரது குடும்பத்தைச் சேர்ந்த முரளி, சபேஷ், சிவா ஆகிய அனைவருமே மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள்.

நாங்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைப் போல இணைந்தே வேலை செய்தோம். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனதிற்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. அவரது மறைவு செய்தி எதிர்பாராத பேரதிர்ச்சியாக உள்ளது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் கூட ஏதோ ஒரு வகையில் மனதைத் தேற்றிக்கொள்ளலாம். ஆனால், வழக்கம்போல நல்ல உடல்நலத்தோடு இருந்தவர், தேநீர் அருந்திவிட்டு குளிக்கச் சென்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிர் பிரிந்துள்ளார் என்பது பெரும் துயரத்தை அளிக்கிறது.

 சீமான்
சீமான்

சமீபகாலமாக நாம் இழக்கக்கூடாத பல மகத்தான ஆளுமைகளை இழந்து வருகிறோம். இயக்குநர் பாரதிராஜா, பாக்கியராஜ் மற்றும் தற்போது தேவா ஆகியோரின் மறைவை ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ மிகவும் கடினமாக உள்ளது. தேவா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக தம்பி ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர்கள் முரளி, சிவா ஆகியோருக்கும் மற்றும் திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மதிப்புமிக்க, மகத்தான, மறக்க இயலாத கலைஞனுக்கு என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'என் ஹார்மோனியப் பெட்டி பத்தி கவிதை சொல்ல முடியுமான்னு தேவா சார் கேட்டாரு.!'- பா.விஜய் ஷேரிங்

இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.தேவாதற்போது ... மேலும் பார்க்க

தேவா: 'ரொம்ப கஷ்டமா இருக்கு; இப்படி திடீர்னு...' - கலங்கிய வடிவேலு

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவாஇ... மேலும் பார்க்க

"என் வாழ்க்கையே தேவா சார் இசையில்தான் தொடங்கியது"- எஸ்.ஜே.சூர்யா எமோஷனல்

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவா... மேலும் பார்க்க

Jailer 2: "திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு..." - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பதிவிட்டிருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன், தற்போது தனது கருத்துக்கு விளக்கமளித்த... மேலும் பார்க்க