செய்திகள் :

தொடர்ந்து சரியும் சந்தை... பணத்தை பத்திரப்படுத்துங்கள்!

post image

இந்தியப் பங்குச் சந்தை தற்போது தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. சில நாள்களில் 1000 புள்ளிகள் வரை சரிந்து பல லட்சம் கோடிகளைச் சந்தை இழக்கிறது. ‘சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது’ என்கிறார்கள் நிபுணர்கள். இதனால், முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றமும் குழப்பமும் நிலவுகிறது.

இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருந்தாலும், வெளிப்புறச் சூழல் மோசமாக இருப்பதால்தான் இந்தச் சரிவு என்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கப் பத்திரங்கள் வருமானம் உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம் எனப் பல அழுத்தங்கள் ஒரே நேரத்தில் சந்தையைத் தாக்குகின்றன.

இந்தச் சந்தைச் சரிவை இந்தியப் பொருளாதாரத்தின் சரிவாகப் பார்க்கும் நிலையும் முதலீட்டார்கள் மத்தியில் இருக்கிறது. அது உண்மையல்ல. நல்ல நிறுவனங்களின் லாப வளர்ச்சி, உள்நாட்டு நுகர்வு, வங்கிகளின் கடன் வளர்ச்சி போன்றவை தொடர்ந்து ஆதரவாகவே இருக்கின்றன. ஆனால், பங்குகளின் விலையை நிர்ணயிப்பது இன்றைய நிலை மட்டும் அல்ல; எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளும் சேர்த்துதான். அந்த எதிர்பார்ப்புகளில்தான் பெரிய மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது.

முதலீட்டாளர்கள் இப்போது பொறுமை காப்பது அவசியம். அவரசப்பட்டு முதலீடுகளை மேற்கொள்ளாமல் ‘கேஷ்’ வைத்திருப்பது நல்லது. போர், வர்த்தகத் தடை, அரசியல் குளறுபடிகளால் ஒருவேளை சந்தை மேலும் சரிந்தால், நல்ல நிறுவனங்களின் பங்குகள் கவர்ச்சிகரமான விலைக்கு வரும்போது, பணம் தயாராக வைத்திருப்பவர்களால்தான் படிப்படியாக முதலீடு செய்ய முடியும். அவசரப்பட்டு முழுப் பணத்தையும் சந்தையில் முதலீடு செய்துவிட்டால் வரப்போகும் காலங்களில் முதலீடு செய்யும் வாய்ப்புக் கிடைக்காது.

அதேபோல், ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் சந்தையின் சரிவைப் பார்த்து பதற்றப்பட்டு முதலீட்டை விற்றுவிட வேண்டாம். நிறுவனத்தின் கடன், லாப வளர்ச்சி, கேஷ் ஃப்ளோ, மதிப்பீடு போன்ற அடிப்படைகளைப் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும்.

சந்தை எப்போது ஏற்றத்துக்குத் திரும்பும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அது திரும்பும்போது நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தச் சரிவை, நம் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையில்லாத ரிஸ்க்கைத் தவிர்த்து, நல்ல வாய்ப்புக்காகக் காத்திருங்கள்.

சந்தை நிச்சயம் மீண்டும் ஏறும். முதலீட்டுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். அதை பயன்படுத்த, கையில் பணத்துடன் தயாராக இருப்போம். ஏற்றச் சந்தையில் ட்ரெண்ட் நம்முடைய ‘ஃப்ரெண்ட்’ என்றால், இறக்கச் சந்தையில் ‘கேஷ்’தான் ராஜா!

- ஆசிரியர்

பங்குச் சந்தை கடும் இறக்கம்... இப்போது முதலீடு செய்வது சரியான முடிவா?

இந்த வாரத்தில் உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் அடைந்த லாபம் அனைத்தும் போனதுடன், நஷ்டம் ஏற்படும் நிலை வந்துள்ளது. கடந்த 6 முதல் 12 மாதங்களில்... மேலும் பார்க்க

Early Retirement: 40 வயதில் ரிட்டயர்மென்ட்... சாத்தியமா, வெறும் பகல் கனவா?

"மாதம் 80,000 சம்பளம் வருது... ஆனா மாசக் கடைசியில அக்கவுண்ட் காலி! 60 வயசு வரைக்கும் இதே மாதிரி ஓடிக்கிட்டே இருக்கணுமா?"இது பலரின் மனதை தினமும் குடையும் கேள்வி.40 அல்லது 50 வயதில் வேலைக்கு 'குட்-பை' ச... மேலும் பார்க்க

கிஃப்ட் சிட்டி (GIFT City): NRI-களுக்கு ஒரு பொன்னான முதலீட்டு வாய்ப்பு!

40 வயதைக் கடந்த வளைகுடா (Gulf) மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் என்.ஆர்.ஐ (NRI) முதலீட்டாளர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இலக்கு உண்டு - தங்கள் கடின உழைப்பில் உருவான சேமிப்பை இந்தியாவில் முதலீடு செய்... மேலும் பார்க்க

Rich Dad, Poor Dad & Smart Dad... உங்கள் குழந்தைக்கு நீங்கள் எப்படிப்பட்ட அப்பா/அம்மா?

நம் குழந்தைகளுக்கு ஒரு பொறுப்பான தந்தையாக (தாயும்தான்) இருக்க வேண்டும் என்று நினைக்காத பெற்றோர்கள் இல்லை. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்கள் என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும், யாருட... மேலும் பார்க்க

மாசாமாசம் SIP கட்டுறீங்களா? 'இந்த' தப்பு பண்ணா... நீங்க ₹1 கோடியை அடையவே முடியாது.!

"ஒரு நாலைஞ்சு வருஷத்துல ₹1 கோடி சேர்த்துடணும் சார்..."இந்த வார்த்தையைச் சொல்லும்போது பலரின் கண்களில் ஒரு பிரம்மாண்டக் கனவு தெரியும். ஆனால், அவரிடம் அடுத்த நொடியே ஒரு எளிய கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்:... மேலும் பார்க்க

ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயை சேர்ப்பது கடினமா அல்லது எளிதான காரியமா?

''நான் ரிட்டயர்ட் ஆகி ஓய்வு பெற இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. பணவீக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க என் ஓய்வுக் காலத்தில் என்னிடம் 3 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்பத... மேலும் பார்க்க