அரியலூர்: நள்ளிரவில் மது அருந்திய போதை ஆசாமிகள் - எச்சரித்த போலீஸாரை கடுமையாக தா...
நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சினிமாவில் ரிதம், வின்னர், சதி லீலாவதி என ஏகப்பட்ட படங்கள் மற்றும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடிதிருந்த பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.
சிறு வயது முதலே தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்து வந்தவர் வத்சலா. முன்னணி நாடக் குழுக்களில் நடித்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் மத்திய அரசில் தணிக்கைத் துறையில் பணி கிடைக்க, அரசு வேலை, நடிப்பு என இரண்டையும் பேலன்ஸ் செய்யத் தொடங்கினார்.
சினிமாவில் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து விட்டவர், சின்னத்திரையில் சித்தி தொடரில் சிவக்குமாருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
'கையளவு மனசு' உள்ளிட்ட மேலும் சில தொடர்கள் சின்னத்திரையில் இவருக்குப் புகழ் சேர்த்தது எனச் சொல்லலாம்.
இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள். மகன்களில் ஒரு மகன் இறந்து விட்டார். மற்ற இரண்டு மகன்களுடன் சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தார். மகள் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக முதுமை காரணமாக நடிப்பிலிருந்து விலகி இருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
வத்சலாவின் மறைவுக்கு சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்றூ மாலை அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.














