செய்திகள் :

"நடிக்க வரும்போதே `எனக்கு விருதெல்லாம் கிடைக்காது’ன்னு நினைச்சேன்" - பிரதீப் ரங்கநாதன் ஷேரிங்க்ஸ்

post image

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழாவில் `டிராகன்’, `டியூட்’ திரைப்படங்களுக்காக, சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் பிரதீப் ரங்கநாதன். இந்த விருதை வழங்கியவர் நடிகர் ரவி மோகன்.

விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு, பிரதீப் ரங்கநாதன் பேசினார்...

"பொதுவா எனக்கு ஸ்டேஜ்னா பயம் இருக்காது. ஆனா, இப்போ நெர்வஸா இருக்கு. எவ்வளவோ வயசானாலும் அம்மாகிட்ட போனா நாம சின்னப் பையன்தான், அந்த மாதிரிதான் இதுவும். சினிமாவுக்கு வந்து 7 வருஷம் ஆகுது. ஆனாலும் ரவி சாரைப் பார்த்தா எனக்குக் கொஞ்சம் நடுங்கும். அவர் போன் கால் பார்த்தாலே எனக்கு ஹார்ட் பீட் எகிறும். இந்த விருது அவர் மூலமா கிடைக்கறதுக்கு விகடனுக்கு ரொம்ப நன்றி.

பிரதீப் ரங்கநாதன் - ரவி மோகன்
பிரதீப் ரங்கநாதன் - ரவி மோகன்

செட்ல என்கிட்ட ஏதாவது நல்ல பழக்கம் இருந்தா அதுக்கு ரவி சார்தான் காரணம். கெட்ட பழக்கம் இருந்தா அதுக்கு நான் மட்டும்தான் காரணம்.

நான் நடிக்க வரும்போதே `எனக்கு விருதெல்லாம் கிடைக்காது’ன்னு நினைச்சேன். ஏன்னா, நான் நடிக்கிறது மாஸ் கமர்ஷியல் மசாலா படம். `லவ் டுடே’ பண்ணும்போது பெஸ்ட் டெபியூட் (Best Debut) கிடைக்கும்னு பார்த்தேன்.

அப்போகூட விகடன் விருது கிடைக்கலை. சரி அவ்வளவுதான்னு நினைச்சப்போ, இப்போ ஒரே வருஷத்துல ரெண்டு படத்துக்காக ‘பெஸ்ட் ஆக்டர்’ விருது கிடைச்சிருக்கு.

வாழ்க்கையில நாம போடுற கணக்கு வொர்க்அவுட் ஆகலைன்னாலும், வாழ்க்கை நமக்குன்னு ஒரு கணக்கு வெச்சிருக்கும். அதனால எதையும் மிஸ் பண்ணிட்டோம்னு கவலைப்படாம இருங்க, கண்டிப்பா ஒருநாள் கிடைக்கும்.

`கோமாளி’ டைரக்ட் பண்ணும்போதே ரவி சார் என்கிட்ட சொல்லுவாரு, ‘நீ நல்லா நடிக்கிறே’ன்னு. எனக்குள்ள ஒரு நடிகர் இருக்கான்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு. அன்னைக்கு அவர் பர்மிஷன் குடுத்து என்கரேஜ் பண்ணதுனாலதான் நான் இங்க இருக்கேன். அவர் ரொம்ப நல்ல மனுஷன்.”

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

கருணாஸ் தயாரிப்பில் கென் கருணாஸ்; வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் கென்! | Exclusive Update

'யூத்' படத்தின் மூலம் இயக்குநராக, ஹீரோவாக கவனம் ஈர்த்தவர் கென் கருணாஸ். அந்தப் படத்தை அடுத்து சத்தமில்லாமல் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ராஜன் வகையறா'வில் நடித்து வருகிறார். காதலும், ஃபேமிலி சென்டிமென்ட... மேலும் பார்க்க

காக்க காக்க : காவலின் காதல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 07

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!`சினி'ஸ்கோப் 07காக்க காக்க : காவலின் காதல்!கேங்ஸ்டர் சேது செங்கல்பட்டு ரயில்வே ... மேலும் பார்க்க

அன்பே டயானா: "படத்தின் கடைசி 20 நிமிடம், தமிழ் சினிமாவின் பெஸ்ட்டான..!" இயக்குநர் ராம் பாராட்டு

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

Arasan: ஸ்லிமான சிலம்பரசன், ஈ.சி.ஆரில் பிரமாண்ட வடசென்னை செட்; மீண்டும் ரெடியாகும் 'அரசன்'- அப்டேட்

வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படப்பிடிப்பு இன்னும் 60 நாள்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே சிலம்பரசன் அடுத்ததொரு கெட்டப்பிற்கு ரெடியாகிறார் என்றும் தக... மேலும் பார்க்க

அன்பே டயானா: "எனது பயணம் 'ஜமா' படத்தில் தொடங்கியது இல்லை, 2013-ல்..!"- பாரி இளவழகன் எமோஷனல்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

இதயம் முரளி: "இது சரியான ரீ என்ட்ரியாக இருக்கும்னு தோணுச்சு" - 'கனா கானும் காலங்கள்' மோனிஷா ஷேரிங்ஸ்

'கனா காணும் காலங்கள்' தொடரின் முதல் சீசனில் சங்கவியாக நடித்து மக்களுக்கு பேவரிட்டானவர் மோனிஷா ரவிஷங்கர். அத்தொடருக்குப் பிறகு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பிலிருந்து முழுமையாகவே விலகி... மேலும் பார்க்க