செய்திகள் :

`விவேக் சாரை AI மூலம் கொண்டு வர விரும்பல' - விகடன் மேடையில் மீசைய முறுக்கு 2 குறித்து ஹிப்ஹாப் ஆதி

post image

சினிமா விருதுகள், 2025-ல் கலந்துகொண்டார் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி.

அவர் விழா மேடையில், `மீசைய முறுக்கு 2’ குறித்துப் பகிர்ந்துகொண்டார்... `` `மீசைய முறுக்கு 2’ போஸ்ட் புரொடக்‌ஷன் வொர்க்கில் இருக்கிறது.

ஆகஸ்ட், செப்டம்பரில் `மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியாகும்.

இந்தப் படம் மியூசிக்கல் படம். அதனால, இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கும்.

ஹர்ஷத் கான் - ஹிப்ஹாப் ஆதி
ஹர்ஷத் கான் - ஹிப்ஹாப் ஆதி

'மீசையை முறுக்கு 1' எப்படி ஒரு மியூசிக்கலோ, அதே மாதிரி 'மீசை முறுக்கு 2'-வும் ஒரு மியூசிக்கல் படம்தான்.

இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. படம் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் பாடல்கள் ரிலீஸ் பண்ணிட்டு இருக்கப்போறோம்.

`மீசைய முறுக்கு 1’-ல நெறைய சீன்ஸ்ல விவேக் சாரை அப்படி ரசிப்போம்... கொண்டாடுவோம்.

`மீசைய முறுக்கு 2’-ல அவரை ரொம்ப மிஸ் பண்ணுறோம். இந்தப் படம் எடுக்கும்போது நெறைய இடத்துல நினைவுகள் வந்தது. அதுலயும் ஒரு அப்பா-பையனோட கதை, இதுலயும் ஒரு அப்பா-பையன் இருக்காங்க.

விவேக் சாரை ஆக்ச்சுவலா மிஸ் பண்றேன். அவர் இப்போ இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும். அவரை நாங்க ஏ.ஐ பண்ணி இந்த உலகத்துல ஃபிட் பண்ண விரும்பலை. ஆனா, படத்துல எப்படியாவது அவருடைய இந்தக் குரலையாவது நாங்க கொண்டு வந்துருவோம்" என்றார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

`புலன் விசாரணையில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சுது; விஜயகாந்த்துக்கு நன்றி' - சரத்குமார் பகிர்வு

2025 ஆம் ஆண்டின் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் `சிறந்த வில்லன் விருதை’ நடிகர் சரத்குமார் பெற்றார். அவருக்கு இந்த விருதை இயக்... மேலும் பார்க்க

ஆனந்த விகடன் 'சினிமா விருதுகள் - 2025 : பிரமாண்ட மேடை... திறமைக்கு மரியாதை!| Live

யார் யார் வெற்றியாளர்கள்?சினிமா விருதுகள், 2025-ல் இன்று யார் யார் கைகளுக்கு விருதாக விகடன் தாத்தா செல்லவிருக்கிறார் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள். ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025ஆனந்த வ... மேலும் பார்க்க