செய்திகள் :

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

post image

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! ஆணவம் அழிவிற்கு வழி" என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

"அனிதா ராதாகிருஷ்ணனைக் கைதுசெய்தது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. ஜெயலலிதா காலத்தில் என் மீது 16 அவதூறு வழக்குகள் போட்டும்கூட என்னைக் கைது செய்யவில்லை. ஒருவரை விமர்சித்து பேசியதற்காக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மு.க.ஸ்டாலின், உதயநிதியை அவதூறாகப் பேசிய ஆதவ் அர்ஜுனாவை கைதுசெய்வார்களா? இந்தக் கைது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை சட்டரீதியாக சந்திப்போம். அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவருவோம். திமுக ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பிய... மேலும் பார்க்க

US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை!

அமெரிக்கா... உலக வல்லரசு, வாய்ப்புகளின் தேசம், அமெரிக்கக் கனவை நனவாக்க துடிக்கும் கோடிக்கணக்கானோரின் புகலிடம். ஆனால், அந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஒரு தலைமுறையின் ஓய்வுக்காலமே இன்று கேள்விக்க... மேலும் பார்க்க

கடலூர்: மாநகராட்சிக் கூட்டத்தில் தலைவர்களின் போட்டோ அட்ராசிட்டி! - கவுன்சிலர்களால் நொந்து போன மேயர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடலூர் மாநகராட்சியில் முதல் கூட்டம் நேற்று நடந்தது. புதிய ஆணையர் கிஷன்குமார் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் சுந்தரி தலைமை தாங்கினார்.... மேலும் பார்க்க

`இயக்கம் அழிந்தால்கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென..'- அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " அனைத்திந்திய அண்ணா தி... மேலும் பார்க்க

"ஆணவம் அழிவிற்கு வழி!"- திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க