செய்திகள் :

`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத், புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரியவில்சனுக்கும், அவர் தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்டநாள்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது.

மரியவில்சன்

அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், எழில் நகரிலுள்ள தன்னுடைய தம்பி வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்.

அதையடுத்து அமைச்சர் மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளாட் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் (IPC 448, 427, 324, 294 (b), 506 (i), 34) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரியவில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், `வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

அதனால் அதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது அவசியம்' என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.குமரப்பா. அதையடுத்து அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து, தேர்தலுக்குப் பிறகு விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர் லாஸ்பேட்டை போலீஸார்.

நிதியமைச்சர் மரியவில்சன்
நிதியமைச்சர் மரியவில்சன்

அந்தக் குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்வதற்காக நாளை கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமைச்சர் மரியவில்சனுக்கு உத்தரவிட்டிருக்கிறது, புதுச்சேரி நீதிமன்றம். தவெக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளராக மரியவில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் அதை முக்கியமான விமர்சனமாக வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள்... மேலும் பார்க்க

US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை!

அமெரிக்கா... உலக வல்லரசு, வாய்ப்புகளின் தேசம், அமெரிக்கக் கனவை நனவாக்க துடிக்கும் கோடிக்கணக்கானோரின் புகலிடம். ஆனால், அந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஒரு தலைமுறையின் ஓய்வுக்காலமே இன்று கேள்விக்க... மேலும் பார்க்க

கடலூர்: மாநகராட்சிக் கூட்டத்தில் தலைவர்களின் போட்டோ அட்ராசிட்டி! - கவுன்சிலர்களால் நொந்து போன மேயர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடலூர் மாநகராட்சியில் முதல் கூட்டம் நேற்று நடந்தது. புதிய ஆணையர் கிஷன்குமார் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் சுந்தரி தலைமை தாங்கினார்.... மேலும் பார்க்க

`இயக்கம் அழிந்தால்கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென..'- அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " அனைத்திந்திய அண்ணா தி... மேலும் பார்க்க

"ஆணவம் அழிவிற்கு வழி!"- திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க