செய்திகள் :

``நான் பாமகவில் இருந்து விலக தயார், எந்தப் பதவியும் வேண்டாம்.!'' - ஜி.கே மணி வேதனை

post image

'ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தால், நான் பாமகவில் இருந்து விலக தயார்' என்று பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி பேசியிருக்கிறார்.

சென்னையில் இன்று (டிச.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே மணி, "அன்புமணி இன்றைக்கு நிறைய விஷயங்களைப் பேசுகிறார்.

ஆனால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். இன்றைக்கு பாமக வளர்ந்ததற்கு ராமதாஸ்தான் முக்கிய காரணம்.

பாமகவுக்கு ஒரு சோதனை என்றால், ராமதாஸால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் தான் கண்ணீர் வடிக்கிறார்.

ஜி.கே மணி
ஜி.கே மணி

என்னைப் பார்த்து, எங்கள் கட்சியில் உழைத்தவர்களைப் பார்த்து ராமதாஸ் உடன் இருப்பவர்களை எல்லாம் பார்த்து அன்புமணி துரோகி என்கிறார்.

ஜி.கே.மணி தான் என்னையும், எங்க அப்பாவையும் பிரித்துவிட்டார் என்று சொல்கிறார்.

இதெல்லாம் எவ்வளவு வேதனையாக இருக்கும். அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்குமாறு ராமதாஸை நான்தான் சம்மதிக்க வைத்தேன்.

இதுகுறித்து பேசும்போது ராமதாஸ் என் மீது மிகவும் கோபப் பட்டார். அன்புமணிக்கு எந்த வகையிலும் நான் கெடுதலோ, துரோகமோ நினைத்ததில்லை.

அப்பாவையும் மகனையும் பிரித்துவிட்டதாக மனசாட்சி இல்லாமல் பேசுகிறார் அன்புமணி.

அப்பாவையும், மகனையும் பிரிக்க முடியுமா? ராமதாஸிடமிருந்து, கட்சியை பிரித்து எடுத்துச் செல்லவேண்டுமென அன்புமணி நினைக்கிறார்.

நான் ராமதாஸிடன் இருப்பதால் தான் அன்புமணி இப்படிப் பேசுகிறார். நாங்கள் ராமதாஸை ராஜாவாக பார்க்கிறோம்.

அன்புமணியை ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக பார்க்கிறோம். ராஜா வீட்டு கன்னுக்குட்டி, எட்டி உதைக்கும், சீறீப்பாயும் என நாங்கள் பொறுமையாகத்தான் இருக்கிறோம்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தால், நான் பாமகவில் இருந்து விலக தயார், பாமகவில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்.

அன்புமணி யார் யார் துரோகிகள் என நினைக்கிறாரோ, அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறோம்.

நானோ என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்எல்ஏ பதவியைக் கூட ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

வேறு கட்சியிலும் சேரமாட்டோம், மீண்டும் நீங்கள் அழைத்தால் பாமகவில் சேருகிறோம்" என்று பேசியிருக்கிறார்.

``மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்ற பாஜக அரசு தீர்மானித்திருக்கிறது!'' - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இனாம் நிலம் தொடர்பாக, நீதிமன்ற நடவடிக்கை என்ற பெயரில் அப்புறப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அவர்களை நேரில... மேலும் பார்க்க

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க