செய்திகள் :

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

post image

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோருடன் நேரடியாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலமும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி ஆலோசனை நடத்தியபிறகு இந்த அறிவிப்பை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபியா வெளியிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் வந்திருந்த ஐரோப்பிய நாடுகளின தலைவர்களும் அதிபர் ùஸலென்ஸ்கியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடத்திய உரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் திங்கள்கிழமை (மே 12) முதல் 30 நாள்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க உக்ரைனும் நட்பு நாடுகளும் தயாராக உள்ளன. கடல், தரை, வான்வழித் தாக்குதல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் முற்றிலும் நிறுத்தப்படும்.

ரஷியா இதனை ஏற்றுக் கொண்டு, போர் நிறுத்தம் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிப்பதற்கான செயல்திறன் மிக்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டால், நிரந்தர அமைதியை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும், இருதரப்பிலும் நம்பகத்தன்மையை வளர்ப்பதற்கும் வழிவகுக்கப்படும் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறுகையில், ’உக்ரைன் வந்துள்ள நான்கு நாடுகளின் தலைவர்களும் போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு அமெரிக்காவுடன் இணைந்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அழைப்பு விடுக்கிறோம். அவருக்கு அமைதியில் உண்மையிலேயே ஆசை இருந்தால் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

கடந்த 1945-ஆம் ஆண்டில் நாஜிக்களின் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றி கொண்ட தினம் ரஷியாவில் கொண்டாடப்படுவதையொட்டி, உக்ரைனில் மே 8 முதல் 10 வரை 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதாக ரஷிய கடந்த மாதம் அறிவித்தது.

ஆனால், இந்த 3 நாள் போர் நிறுத்தம் வெறும் கண்துடைப்பு என்று விமர்சித்த உக்ரைன், ’ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போர் நிறுத்தம் நீடித்திருக்க வேண்டும்' என்று அப்போதே வலியுறுத்தியது. அதன்படி, திங்கள்கிழமை முதல் 30 நாள்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தற்போது அழைப்பு விடுத்துள்ளது.

இருந்தாலும், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அனைத்தும் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த வெற்றி தின போர் நிறுத்தத்தையே அந்த நாடு நூற்றுக்கணக்கான முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியது.

அதற்கு முன்னரும், ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 30 மணி நேர போர் நிறுத்தத்துக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வதாக உக்ரைனும் கூறியது.

இருந்தாலும், போர் நிறுத்தத்தை மீறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

அதே போல், எரிசக்தி மையங்கள் மீது 30 நாள்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று அமெரிக்கா முன்னிலையில் ரஷியாவும், உக்ரைனும் கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் இரு நாடுகளும் மீறியது நினைவுகூரத்தக்கது.

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க