செய்திகள் :

நிலப் பிரச்னை - வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜே.சி.பி மூலம் வீட்டை இடித்த கும்பல் கைது!

post image

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சொந்தமான இரண்டு சர்வே எண்களிலுள்ள 10 சென்ட் நிலத்தை, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவருக்கு ரூ. 40 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். எனினும், விற்பனைப் பத்திரத்தில் ஒரு சர்வே எண்ணை மட்டும் குறிப்பிட்டுக் காட்டி முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.

​இதையடுத்து, அரிகிருஷ்ணன் வாரியூர் அஞ்சல், மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த ராமசந்திரன் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் மூலம் அந்நிலத்தை வனஜா என்பவருக்கு மறுவிற்பனை செய்துள்ளார். தொடர்ந்து, நிலத்தைக் காலி செய்து புதிய உரிமையாளரான வனஜாவிடம் ஒப்படைக்குமாறு ராமசந்திரன் வழக்கறிஞர் அய்யப்பனிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.

நிலத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத அய்யப்பன், அங்குள்ள தனது பழைய வீட்டில் பெற்றோரை தங்க வைத்ததுடன், தனது தந்தை சுயம்பு மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசந்திரன், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 22-ம் தேதியன்று ஜே.சி.பி இயந்திரத்துடன் சென்று அய்யப்பனின் வீட்டை இடிக்கத் தொடங்கியுள்ளார்.

கைது

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அய்யப்பன், வீட்டை இடிப்பதைத் தடுத்து தகராறில் ஈடுபட்டார். அப்போது ராமசந்திரனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அய்யப்பனை அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்துத் தாக்கியதுடன், வீட்டை முழுமையாக இடித்துத் தள்ளினர். மேலும், நிலத்தை வனஜாவிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலும் விடுத்துள்ளனர். அய்யப்பனை மரத்தில் கட்டி வைத்திருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

மரத்தில் கட்டிவைத்த காட்சி

இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் அய்யப்பன் அளித்த புகாரின் பேரில், அஞ்சுகிராமம் போலீஸார் ராமசந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில்... மேலும் பார்க்க

மதுரை: சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்; 10 வயது சிறுவனுடன் தாய் கைதான பின்னணி என்ன?

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகாலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

தேனி: ஷேர் ஆட்டோவில் தப்பிக்க முயன்ற கைதி; மடக்கிப் பிடித்த போலீஸ்... ஆட்டோ ஓட்டுநர் சொல்வதென்ன?

தேனி மாவட்டம், தக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையிலிருந்து தப்பித்த 17 சிறைக் கைதிகளில் ஏற்கெனவே நான்கு பேர் பிடிபட்டு, கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது லிங்க பிரசாத் என்பவரை தேனி மாவட்டம்... மேலும் பார்க்க

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம்; முடிவுக்கு வந்த பெற்றோர் போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ச... மேலும் பார்க்க

தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: "காவலரின் தங்க செயின் பறிப்பு" - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய விவகாரத்தில், நேற்று (அக்டோபர் 26 ஆம் தேதி) இரவு பணியில் இருந்த சிறை காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார்.தேன... மேலும் பார்க்க

அசாம்: குத்தகைக்கு விட்ட ஹோட்டலைத் திரும்பக் கொடுக்க மறுப்பு; உரிமையாளர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிலாஸ் இன் என்ற ஹோட்டலை கனகாந்த கோகோய் என்பவர் ஹெலனா பராலி என்பவரிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பாக ஹெலனாவிற்கும், குத்தகை... மேலும் பார்க்க