செய்திகள் :

நெருக்கிய போலீஸ்; களத்தில் இறங்காத உடன்பிறப்புகள்!' - அன்பிலை கைவிட்ட அறிவாலயம்?

post image

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அன்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நேற்று மாலை முதல் நள்ளிரவு வரையிலான காலக்கட்டத்தில் உடன்பிறப்புகள் யாரும் பெரிதாக இறங்கி களமாடவில்லை. கட்சி தன்னுடன் நிற்கவில்லை என்பதை உணர்ந்த அன்பில் இன்னும் உடைந்து போயிருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

கமிஷ்னர் அலுவலகத்தில்
கமிஷ்னர் அலுவலகத்தில்
கமிஷ்னர் அலுவலகத்தில்
கமிஷ்னர் அலுவலகத்தில்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சீனியர் அரசியல் விமர்சகர்கள் சிலர், 'அன்பில் முன்னாள் அமைச்சர் மட்டுமில்லை. அவர் திமுகவின் தலைமைக் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படிப்பட்ட ஒருவரை திமுகவின் வழக்கறிஞர் அணியின் முகமாக இருக்கும் ராஜ்யசபா எம்.பி வில்சனின் அலுவலகத்திலிருந்து காவல்துறை தூக்கியிருக்கிறது. இந்தக் கைதை மிகத் தீவிரமாக எதிர்த்து திமுக களமாடியிருக்க வேண்டும்.

ஆனால், திமுக முகாமே சைலண்டாக இருக்கிறது. 'அரசியல் பழிவாங்கல்' என சம்பிரதாய அறிக்கையோடு தலைமை நிறுத்திக் கொண்டது. வில்சனின் அலுவலகத்திலிருந்து எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கே ஒரு கட்சிக்காரர் கூட இல்லை. எழும்பூர் அலுவலகத்தில் 4 மணி நேரம் அன்பில் இருந்திருக்கிறார். அப்படியிருந்தும் சென்னைக்குள் இருக்கும் முன்னாள் அமைச்சர்களோ மா.செக்களோ யாரும் கமிஷ்னர் ஆபிஸ் பக்கம் தலைக்காட்டவில்லை. கவுன்சிலர் பரிதி மட்டும்தான் போலீஸிடம் சண்டை போட்டு அலுவலகத்துக்குள் சென்றார்.

மருத்துவமனையில் சேகர்பாபு
மருத்துவமனையில் சேகர்பாபு

எழும்பூர் வேட்பாளர் தன் பங்குக்கு ஒரு 10 ஆட்களுடன் வந்து போலீஸிடம் கடமைக்கு வாக்குவாதம் செய்துவிட்டு கிளம்பினார். அதேபாணியில் எம்.பி.கிரிராஜனும் கேட்டில் நின்றபடியே சவுண்டை விட்டார். அதிகபட்சம் 50 உடன்பிறப்புகள் வேண்டுமான எழும்பூரில் கூடியிருப்பார்கள். அன்பில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பிறகுதான் சேகர் பாபுவும் கலாநிதி வீராசாமியும் சீனுக்குள் வருகிறார்கள். நீதிமன்றத்துக்கு வெளியேயும் அதே 50 உடன்பிறப்புகள் மட்டும்தான் இருந்தனர். ஒரு இரண்டு நிமிடம் கூட போலீஸ் வேனை நிறுத்தி தர்ணா செய்ய முடியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்பாலாஜி கைதான போது திமுக தலைமை எப்படி ரியாக்ட் செய்தது என யோசித்துப் பாருங்கள். அன்பில் எப்படி தனித்துவிடப்பட்டிருக்கிறார் என்பது புரியும். தலைமை நினைத்திருந்தால் ஆட்களை இறக்கி இந்த கைதை பெரிய பேசுபொருளாக்கி மைலேஜ் தேற்றியிருக்க முடியும். ஆனால், திமுக தலைமை அன்பிலிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறது. இதுதான் அறிவாலயம் அன்பிலை கைவிட்டு விட்டதோ எனும் கேள்வியையும் எழுப்புகிறது' என்கின்றனர்.

அன்பில் மகேஸ் கைது: "நிர்வாகச் சீர்கேடு, பழிவாங்கல், அடக்குமுறை" - திமுக தலைவர்கள் சொல்வது என்ன?

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்; ரயில் மோதி மூவர் பலியான சோகம்

மும்பையில் நேற்று கஞ்சூர்மார்க்கில் உள்ள சிக்னலிங் ரிலே அறையில், மின்சார ஏற்ற இறக்கம் மற்றும் வெப்ப அதிகரிப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால் மத்திய ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைகள் நாள் முழுவது... மேலும் பார்க்க

Dhanush: "தனுஷைப் பார்த்து ஆளுங்கட்சி பதற்றமடைகிறது" - திண்டுக்கல் சீனிவாசன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தைப் பெற்றுக் கொள்வதற... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் கைது: "கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும், திசைத்திருப்பவுமே இந்தக் கைது" - உதயநிதி

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேற்று (அக்டோபர் 26) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ... மேலும் பார்க்க

தேனி‌: மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு, அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு வல... மேலும் பார்க்க

புழலில் அன்பில்! - முறையிட்ட திமுக தரப்பு; ஏற்காத நீதிபதி! நள்ளிரவில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கைதான அன்பிலை அழைத்துக் கொண்டு காவல்துறை இரவு 10 மணிக்... மேலும் பார்க்க