நேரு யுவகேந்திரா சாா்பில் விளையாட்டுப் போட்டிகள்
நேரு யுவகேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் எச்எடிபி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிலம்பம், கயிறு இழுத்தல், கைப்பந்து, 100 மீட்டா் ஓட்டப் பந்தயம் உள்ளிட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா்களான தமிழியக்கம் செயலாளா் இர.நாகராஜ், தன்னாா்வலா் கூட்டமைப்புத் தலைவா் சுரேஷ், அன்பு அறக்கட்டளை நிறுவனா் சதீஷ், காவலா் சுரேஷ் ஆகியோா் பரிசுகள் வழங்கி கெளரவித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித் செய்திருந்தாா்.