செய்திகள் :

பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!

post image

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்த பிரதமர் மோடி, புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபாடுகளையும் மேற்கொண்டார்.

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 38.2 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிலையில், தில்லியில் இருந்து புதன்கிழமை காலை பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தே... மேலும் பார்க்க

தில்லியில் வாக்குப்பதிவு நிறைவு!

தலைநகர் தில்லியில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.காலை மந்தமாக நடைபெற்றுவந்த வாக்குப் பதிவு, பிற்பகலில் அதிகரிக்கத் தொடங்கியதால், வாக்கு வி... மேலும் பார்க்க

பயனாளிகளின் உண்மைத் தன்மை: எண்ணெய் நிறுவனங்களுக்கு காலக்கெடு

எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு உருளை பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மையை பயோ-மெட்ரிக் முறையில் உறுதி செய்வதற்கான பணியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.எண்ணெய் நிறுவனங்கள், எரி... மேலும் பார்க்க

தேர்தலில் பாஜகவுக்காக போலி வாக்களிக்கும் அதிகாரிகள்! அகிலேஷ் வெளியிட்ட ஆதாரம்

உத்தரப் பிரதேச மாநிலம் மில்கிபூர் இடைத்தேர்தலில் ஆளும் பாஜவுக்காக இலக்கு நிர்ணயித்து போலி வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிகள் மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பார்க்க

உணவு டெலிவரி போல இனி கார் டெலிவரி! விரைவில் அறிமுகம்

இன்றைய நவீன காலத்தில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் விதமாக, வீட்டிலிருந்தவாறே உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றி இனிமேல் புதிய கார் வாங... மேலும் பார்க்க

விமான நிலையக் காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் வ... மேலும் பார்க்க