செய்திகள் :

பங்குச் சந்தை கடும் இறக்கம்... இப்போது முதலீடு செய்வது சரியான முடிவா?

post image

இந்த வாரத்தில் உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் அடைந்த லாபம் அனைத்தும் போனதுடன், நஷ்டம் ஏற்படும் நிலை வந்துள்ளது. கடந்த 6 முதல் 12 மாதங்களில் முதலீடு செய்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் தற்போது நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள்.

இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, நிஃப்டி குறியீடானது கடந்த ஓராண்டு காலத்துக்குமுன் இருந்த புள்ளிகளுக்குப் பக்கத்தில் (22231) வந்துவிட்டது. சென்செக்ஸ் குறியீடும் ஏறக்குறைய அப்படியே. நிஃப்டி குறியீடானது கடந்த ஓராண்டு காலத்தில் 12 சதவிகிதமும், சென்செக்ஸ் குறியீடு 12 சதவிகிதத்துக்கு மேலும் இறக்கம் கண்டுள்ளது.

இந்த நிலையில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடுமையாக வருத்தம் அடைந்துள்ளனர். லாபம் கிடைக்கும் என்று முதலீடு செய்தால், நஷ்டம் வந்துவிட்டதே என்பதுதான் அவர்களுடைய கவலை. எனவே, மேலும் நஷ்டம் வராமல் இருக்க ஏற்கெனவே முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுத்துவிடலாமா என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இதுவரை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யாதவர்கள் இப்போது முதலீடு செய்யலாமா அல்லது இன்னும் சில மாதங்கள் கழித்து, நிலைமை சரியான பிறகு முதலீடு செய்யலாமா என்று யோசித்து வருகிறார்கள். இவர்களுக்கான பதில் என்ன?

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

பங்குச் சந்தை இறக்கம் ஏன்?

தற்போது உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டிருப்பதற்கு முக்கியமான காரணங்கள், உலக அளவிலானவை. கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தபின் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாக பாதிப்படைந்தது. சாதாரணமாக 70 முதல் 75 டாலர் அளவுக்கு விற்பனை ஆகும் கச்சா எண்ணெய், 90 - 100 டாலருக்கு மேல் விற்பனை ஆகிவருகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதால், பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து, பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலக அளவில் மத்திய வங்கிகள் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதனால், பங்குச் சந்தையில் இருக்கும் பணம் வங்கி டெபாசிட்டுக்குப் போகிறது. பங்குச் சந்தை இறக்கம் காண்பதற்கு இவை எல்லாம்தான் முக்கியமான காரணங்கள் ஆகும்.

இந்தக் காரணங்கள் தவிர, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது என வேறு சில காரணங்களினாலும் இந்தியப் பங்குச் சந்தை கடந்த ஓராண்டு காலத்தில் கடும் இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இறக்கம் தொடருமா?

பங்குச் சந்தை ஏற்கெனவே குறிப்பிடத்தகுந்த அளவு இறக்கம் கண்டுள்ள நிலையில், இனிவரும் மாதங்களில் இன்னும் கணிசமாக இறங்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், இப்போதுள்ள உலக சூழலில் பங்குச் சந்தை இதற்கு மேலும் இறங்காது என்று சொல்ல முடியாது. காரணம், அடுத்த மாதமான நவம்பரில் அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடக்கப் போகிறது. இந்தத் தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்சி வெல்லுமா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அவர் ஜெயித்தால், ஈரான் மீதான போர் நெருக்கடி இன்னும் கடுமையாகலாம். அப்போது கச்சா எண்ணெய் விலை இன்னும் கடுமையாக உயர்ந்து, உலகப் பொருளாதாரத்துக்கு மேலும் நெருக்கடி உருவானால், பங்குச் சந்தை இன்னும் இறங்க வாய்ப்புண்டு. அவர் தோல்வி அடைந்ததால், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் குறையும். அப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தால், பங்குச் சந்தைகள் மேலே செல்லத் தொடங்கும். ஆக, அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகும் வரை பங்குச் சந்தை மேலே செல்லுமா அல்லது கீழே செல்லுமா என்கிற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.

பங்குச்சந்தை: எதில் முதலீடு செய்ய கவனம் வேண்டும்?
பங்குச்சந்தை முதலீடு

இப்போது முதலீடு செய்யலாமா?

இப்போது பங்குச் சந்தை இறக்கம் கண்டதற்கு அமெரிக்க - ஈரான் போரினால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம். கச்சா எண்ணெய் விலை மீண்டும் 70 - 80 டாலருக்கு வந்துவிட்டால், பங்குச் சந்தைகள் ஏற்றம் காணத் தொடங்கிவிடும். காரணம், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 ாாலருக்கு மேலேயே இருந்தால், அதை உலக மக்களால் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் உலக அளவிலான மக்கள் அடுத்துவரும் நாள்களில் எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த மாற்றங்களுக்குப்பிறகு பங்குச் சந்தை உயரத் தொடங்கிவிடும் என்பதால், இப்போது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மிகச் சரியான முடிவாக இருக்கும்!

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு என்பது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டு வரை நீண்ட காலத்துக்கான முதலீடாகும். இப்போது இருக்கும் இந்த நெருக்கடி எல்லாம் 10 ஆண்டுகள் காலத்துக்குள் மறைந்துவிடும். எனவே, தற்போது விழுந்திருக்கும் பங்குச் சந்தை மீண்டும் நிச்சயம் உயரும் என்கிற புரிதலும் நம்பிக்கையும் உடையவர்கள் தற்போது பங்குச் சந்தை தரும் முதலீட்டு வாய்ப்பினைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். நஷ்டம் வந்துவிடுமே என்று நினைத்து பயந்தால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவே முடியாது. தற்போது கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை, நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை சரியாகப் புரிந்துகொண்டு இப்போது முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்!

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

ஏ.ஆர்.குமார் - 89259 44568

சபரிநாதன் - 89259 44569

தங்கலட்சுமி - 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

Early Retirement: 40 வயதில் ரிட்டயர்மென்ட்... சாத்தியமா, வெறும் பகல் கனவா?

"மாதம் 80,000 சம்பளம் வருது... ஆனா மாசக் கடைசியில அக்கவுண்ட் காலி! 60 வயசு வரைக்கும் இதே மாதிரி ஓடிக்கிட்டே இருக்கணுமா?"இது பலரின் மனதை தினமும் குடையும் கேள்வி.40 அல்லது 50 வயதில் வேலைக்கு 'குட்-பை' ச... மேலும் பார்க்க

தொடர்ந்து சரியும் சந்தை... பணத்தை பத்திரப்படுத்துங்கள்!

இந்தியப் பங்குச் சந்தை தற்போது தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. சில நாள்களில் 1000 புள்ளிகள் வரை சரிந்து பல லட்சம் கோடிகளைச் சந்தை இழக்கிறது. ‘சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத நி... மேலும் பார்க்க

கிஃப்ட் சிட்டி (GIFT City): NRI-களுக்கு ஒரு பொன்னான முதலீட்டு வாய்ப்பு!

40 வயதைக் கடந்த வளைகுடா (Gulf) மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் என்.ஆர்.ஐ (NRI) முதலீட்டாளர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இலக்கு உண்டு - தங்கள் கடின உழைப்பில் உருவான சேமிப்பை இந்தியாவில் முதலீடு செய்... மேலும் பார்க்க

Rich Dad, Poor Dad & Smart Dad... உங்கள் குழந்தைக்கு நீங்கள் எப்படிப்பட்ட அப்பா/அம்மா?

நம் குழந்தைகளுக்கு ஒரு பொறுப்பான தந்தையாக (தாயும்தான்) இருக்க வேண்டும் என்று நினைக்காத பெற்றோர்கள் இல்லை. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்கள் என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும், யாருட... மேலும் பார்க்க

மாசாமாசம் SIP கட்டுறீங்களா? 'இந்த' தப்பு பண்ணா... நீங்க ₹1 கோடியை அடையவே முடியாது.!

"ஒரு நாலைஞ்சு வருஷத்துல ₹1 கோடி சேர்த்துடணும் சார்..."இந்த வார்த்தையைச் சொல்லும்போது பலரின் கண்களில் ஒரு பிரம்மாண்டக் கனவு தெரியும். ஆனால், அவரிடம் அடுத்த நொடியே ஒரு எளிய கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்:... மேலும் பார்க்க

ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயை சேர்ப்பது கடினமா அல்லது எளிதான காரியமா?

''நான் ரிட்டயர்ட் ஆகி ஓய்வு பெற இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. பணவீக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க என் ஓய்வுக் காலத்தில் என்னிடம் 3 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்பத... மேலும் பார்க்க