செய்திகள் :

பழனி கோயில் நில மோசடி: வழக்கின் நிலை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு!

post image

பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயருக்கு பதிவு செய்ய முயன்ற சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளார் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் நிலத்தை விற்க முயன்றதாக முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் மற்றும் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார் 4 பேரை கைதுசெய்திருக்கின்றனர்.

இதில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் ஜாமீன் பெற்றுள்ளதோடு கடந்த நான்கு நாள்களாக சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நில மோசடி தொடர்பாக இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 84 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அன்னபூரணி சிவகுமார், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பிரதீப் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள் .

ஜஸ்டின் மணிகண்டன்

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வந்தது. அப்போது, ‘எதன் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்?' என சிபிசிஐடி தரப்பிலும், அரசு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ‘அரசு அலுவலர்களோடு இணைந்தே இந்த முறைகேடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், ``விசாரணைக்கு முன்பாக மனுதாரர்கள் இவ்வாறு வழக்கு தொடர்பாக தொடர்வதற்கு தகுதியை உறுதி செய்ய வேண்டும். பழனி மடத்தின் அறங்காவலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர், இதில் வழக்கு பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவர் அறங்காவலர் குழுவை சேர்ந்தவரா?” என கேள்வி எழுப்பினார்கள்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

கோயில் நிர்வாகம் தரப்பில், “அன்னபூரணி சிவகுமார் மடத்தின் அறங்காவலர் அல்ல. அவர் கோயிலின் அறங்காவலர் குழுவில் ஒருவராக இருக்கிறார்” எனக் கூறினார்கள். அதையடுத்து நீதிபதிகள், ``தற்போது வழக்கு விசாரணை என்ன நிலையில் இருக்கிறது என்பதை முதலில் பார்த்துக் கொள்வோம்; அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” எனக் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5 தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.

நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க